Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, 14 May 2014

தமிழருவி மணியன் மன்மோகன் சிங்க்கு கடிதம்


மாண்புமிகு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு... உங்கள் பத்தாண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்ட பலகோடி சாமான்ய இந்தியக் குடிமக்களில் ஒருவன் மிகுந்த பணிவோடும் நிறைந்த நல்லன்போடும் எழுதும் கடிதம். உங்கள் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர். இந்தக் கடிதத்தின் சாரத்தை அவர் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன்!

Wednesday, 5 December 2012

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு


உதாரணம்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்பான விற்பனை நிறுவனங்களான பெப்சி மற்றும் கோகோ-கோலா போன்றவற்றை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் போது இந்த நிறுவனங்களால் இந்திய சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது என்று சொல்லப்பட்டது,ஆனால் இன்றைய நிலைமையே வேறு எந்த ஒரு சிறு கிராமத்திலும் கோலி சோடா,கலர் சோடா கிடைப்பதே இல்லை,ஒரு கிராமத்திற்கு ஒரு கோலி சோடா வியாபாரியின் வாழ்க்கை இந்த அந்நிய முதலீட்டால் பாழாய் போனது தான் மிச்சம்.

Thursday, 29 November 2012

யார் நல்ல வியாபாரி?...


யார் நல்ல வியாபாரி?

தன்னிடம் உள்ள பொருளை விற்பவனும்,தன்னுடைய அறிவை விற்பவனும்,தன்னுடைய கண்டுபிடிப்புகளை விற்பவனும் மட்டுமே நல்ல வியாபாரிகள்.ஆனால் அதையும் தாண்டி தன்னுடைய மக்கள் செல்வாக்கை விற்பவர்களை என்னவென்று சொல்ல முடியும்.

அப்படித்தான் திமுக இன்று நடந்து கொண்டு இருக்கிறது,முதலில் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை திமுக எதிர்க்கும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது,இரண்டு கட்ட பேச்சு வார்த்தைக்கு (பேரத்திற்கு) பிறகு திமுக சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை மனக் கசப்போடு ஆதரிக்கும் என்று கலைஞர் அறிவித்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? திமுக எதிர்த்தால் காங்கிரஸ் ஆட்சி கலைந்து விடும் மதவாத கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிறார்.இவ்வாறு சொன்ன இதே கலைஞர் சென்ற பாஜக ஆட்சியில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பங்கு வகித்தார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.

அவருக்கு தேவை நடுவண் அரசில் பதவி,எந்த அரசாக இருந்தாலும் பரவாயில்லை,தேவகௌடா அரசிலும்,ஐ.கே.குஜரால் அரசிலும், பாஜக அரசிலும் அவரது மருமகன் முரசொலிமாறன் மத்திய அமைச்சராக இருந்தார்,அதற்கு பிறகு இப்போது நடந்து கொண்டு இருக்கிற எட்டரை ஆண்டுகால காங்கிரஸ் அரசில் அவரது பேரன்,அவரது மகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று எப்போதும் அதிகாரத்தில் இருக்க ஆசைப்படுபவர்.

இப்போது தன் மகளுக்காகவும்,ராஜாவுக்காகவும், கலைஞர் தொலைக்காட்சி வழக்கில் இருந்து விடுபடவும் அவர் காங்கிரஸ் கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டிய நிலையில் உள்ளார்.ஆக அவருக்கு அவருடைய சுயலாபம் தான் முக்கியம்.மக்களாவது மன்னாங்கட்டியாவது.

ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் பங்கு வகித்தபோது பாஜக மதவாத கட்சி என்று கலைஞர் அவர்களுக்கு தெரியாதா?அவர் எலிப்போறிக்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறார் உள்ளே இருந்தாலும்,வெளியில் போனாலும் இழப்பு அவருக்குத் தான் என்பதை அவர் மறந்து விட்டார்.ஏற்கனவே ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது எல்லாம் முடிந்த பிறகு டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐ.நா சபை மனித உரிமை அமைப்பில் கொடுத்து விட்டு தமிழருக்கு இவர்தான் நல்லது செய்கிறவர் போல் நாடகமாடுகிறார்.ஏன் இவருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மூலமாக ஐ.நா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பேசி இருக்கலாமே?அதையெல்லாம் செய்வாரா இவர்.இவருக்கு தேவை அதிகாரம்,அமைச்சர் பதவி மட்டுமே.

ஈழத் தமிழர்களும்,சில்லறை வியாபாரிகளும் வாழ்ந்தால் என்ன,செத்தால் என்ன அதை பற்றி எல்லாம் கவலை இல்லை.

அறிஞர் அண்ணா பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போன்றது என்றார் ஆனால் அவர் வழி வந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களோ பதவியை இடுப்பில் கட்டும் வேட்டியாக மாற்றிக்கொண்டார் என்பது தான் வேதனை. துண்டு இல்லாமல் இருக்கலாம் ஆனால் வேட்டி இல்லாமல் இருக்க முடியுமா?

காங்கிரசின் எல்லா அக்கிரம,அநியாயங்களுக்கும் துணை போகிறார்,அதற்கான பலனை நிச்சயம் இவர் அனுபவிப்பர்.எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் கலைஞர் அவர்களே.

இப்போது சொல்லுங்கள் யார் நல்ல வியாபாரி என்று?...


அருணை வினோத்.

Saturday, 24 November 2012

காங்கிரஸ் கட்சியின் கேவலமான அரசியல்


அடுத்தவன் இரத்தத்தின் மீதே அரசியல் செய்து பழக்கப்பட்டு போன காங்கிரஸ் இப்போது குஜராத் தேர்தலுக்காக அஜ்மல் கசாப்பை அவசர அவசரமாக தூக்கில் போட்டு தனது உடைந்து போன பெயரை நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளது.

குஜராத்தில் தேர்தலில் கிடைக்க போகும் ஒன்று,இரண்டு MLA சீட்டுக்காக இப்படிப்பட்ட கேவலமான காரியத்தை செய்து இருக்கிறது.ஏனென்றால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமாக பிரச்சனையாக பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு மற்றும் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை இந்த அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று குற்றம் சாட்டி தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்,அதுவே பாஜக வின் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக இருந்தது,இப்போது பாஜக வால் அதை செய்ய இயலாது.இப்போது உடனடியாக அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சக பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார்,உள்துறை அமைச்சர் 48 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்,இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை.ஏனென்றால் குஜராத் தேர்தல் மற்றும் அடுத்தவருட பாராளுமன்ற தேர்தல்.

Sunday, 5 August 2012

டெசோ என்ன செய்ய போகிறது?...


டெசோ ஒன்றுமே செய்யப் போவதில்லை,கருணாநிதி அரசியல் செய்வதற்கு வேண்டுமானால் பயன்படலாம்,அது ஈழத் தமிழர்களின் ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட பதில் சொல்லப் போவதில்லை.

ஆட்சியில் இருக்கும் போது ஈழத் தமிழர்களுக்காக ஒன்றுமே செய்யாத கருணாநிதி இப்போது ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் செய்கிறார்.

ஒரு இனத்தின் ஓலக்குரல் தேசம் முழுக்க கேட்ட போது அதற்கு காரணமான கேடு கெட்ட காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து பதவிக்காக டெல்லியில் பிச்சை எடுத்தவர் என்று டெசோ மாநாடு நடத்துகிறார்.

Monday, 9 July 2012

நாதியற்ற தமிழன்...



சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சென்ற மாத இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் இலங்கையில் தமிழர்கள் வாழும் கிழக்கு பகுதியில் சுமார் 15,000 பேரை காணவில்லை என்றும் உண்மையான கணக்கு அதை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.கடைசிகட்ட போரின் போது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையின் பல பகுதிகளில் செயல்பட இலங்கை அரசு தடை விதித்தது.


செங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஈழத்தமிழர்கள் சுமார் 15 பேர் சில கோரிக்கைகளை (அடிப்படை வசதி) வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.அதில் 7 பேர் மிக கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

Thursday, 5 July 2012

மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்


மெரினா கடற்கரையில் வாக்கிங் போனவர்களிடம் மது விலக்கு குறித்து துண்டு பிரசுரங்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.





ஏன் அய்யா நீங்க மெரினா கடற்கரைக்கு எல்லாம் போய்கிட்டு உங்க வீட்டு பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக் கடைக்கு குடிக்க வரும் குடிமகங்களிடம் பிரச்சாரம் பண்ணலாமே....ஆனா யாரு அந்த துண்டு பிரசுரங்களை வாங்குவது....அவ்வளவு ஏன் உங்க கட்சிகாரர்கள் கூட வாங்கமாட்டர்கள்...

Thursday, 14 June 2012

50 ஆண்டுகளில் செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் செய்தோம்-மு.க.ஸ்டாலின்




கருத்து கந்தசாமி : அது என்னவோ உண்மை தான்,ஐம்பது ஆண்டுகளில் யாருமே அடிக்கமுடியாத கொள்ளையை ஐந்து ஆண்டுகளில் தி.மு.க வினர் அடித்து முடித்தார்கள்.ஸ்டாலின் இந்த விஷயத்திலாவது உண்மையை ஒத்துகொள்கிறாரோ அவரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.


கொள்கைக்கு பேர் போன தி.மு.க இப்போது கொள்ளைக்கு மாறிவிட்டது தான் வருத்தம்.

Monday, 4 June 2012

இயலாமையின் வெளிப்பாடு!...


இந்தியப் பொருளாதாரத்தில் திடீரென்று ஏற்பட்டுள்ள சரிவை மீட்டெடுக்க, மத்திய அரசு சில சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. திட்டம் சாரா செலவினங்களை 10% குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லா துறைகளுக்கும் நிதியமைச்சகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் சிக்கன நடவடிக்கைகளின் முதல்கட்டமாகும்.
புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்படும். வாகனங்கள் வாங்குவது தவிர்க்கப்படும். திட்டங்களின் மறுமதிப்பீட்டுக்கு அனுமதி கிடையாது. கருத்தரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்தும் போக்குகளுக்குத் தடை. அத்துடன், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சிக்கன நடவடிக்கைகளுக்கான பட்டியல் விரிந்துகொண்டே போகின்றது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகளால் பெரிய நன்மை விளைந்துவிடுமா என்றால், அப்படியொன்றும் சொல்லிவிட முடியாது. 2011-12 ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 5.7% ஆக இருப்பது இதன் மூலம் 5.1% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவ்வளவே!
சென்ற நிதியாண்டின் இறுதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8.4% ஆக இருந்தது. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கு 9% பொருளாதார வளர்ச்சியை எட்டுவதுதான். ஆகவே, இந்த இலக்கை அடைந்துவிடுவோம் என்றுதான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்படி 6.7% ஆக சரியும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உற்பத்தி (ஜிடிபி) 5.3% ஆக எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைவாக இருந்ததுதான், தற்போதைய சிக்கன நடவடிக்கை அறிவிப்புக்கு முக்கிய காரணம்.
2008 ஆம் ஆண்டு மேலை நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோதும்கூட ஸ்திர நிலையில் இருந்த பொருளாதார வளர்ச்சி, இப்போது ஏன் இப்படி ஒரு சரிவைச் சந்திக்கிறது என்பதுதான் எல்லாரையும் யோசிக்க வைத்திருக்கிறது. இந்தச் சரிவுக்கு ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்து போனதும், முதலீடுகள் குறைந்து போனதும் இரண்டு குறிப்பிடத்தக்க காரணங்கள்.
பொருளாதார வல்லுநர்களைப் பொருத்தவரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவதற்கு மிக முக்கியமான காரணம், கூட்டணி அரசியல் சுமை என்று குற்றம் சாட்டுகிறார்கள். கூட்டணிக் கட்சிகளைத் தங்கள் விருப்பத்துக்குக் கட்டி இழுப்பதற்குப் பதிலாக அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் திட்டங்களை மாற்றிக்கொண்டு, எதையும் முழுமையாகச் செய்ய முடியாத நிலைமைதான் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்காமல் தேக்க நிலை ஏற்பட்டதற்குக் காரணம் என்பது அவர்களது வாதம்.
இத்தோடு, வருமானம் வரும் வழி குறுகிப்போன நிலையில், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் வரும் வழிகளையெல்லாம் குறைந்த விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் தனக்குத்தானே இழப்பை ஏற்படுத்திக்கொள்ளும் போக்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம்.
உதாரணமாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம், நிலக்கரிச் சுரங்க வயல்களைக் குறைந்த விலைக்குக் குத்தகை விட்டது, கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
2ஜிஅலைக்கற்றை, நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் போன்ற அரசுக்கு வருவாய் பெற்றுத் தரும் தேசச் சொத்துகளைச் சரியான முறையில் விலை நிர்ணயம் செய்திருந்தாலே போதும் இந்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். கூட்டணி நிர்பந்தம் என்கிற பெயரில் அமைச்சர்கள் செய்யும் ஊழல்களைக் கண்டும்காணாமல் இருந்ததால் இந்திய அரசுக்குப் பெரிய அளவில் பொருளிழப்பு ஏற்பட்டது உண்மை. அதற்குக் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே பொறுப்பேற்கச் சொல்வது சரியாகப்படவில்லை.
ரூபாய் மதிப்புக் குறையும்போதெல்லாம் அதைச் சரி செய்ய அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மட்டுமே ஒரே வழி என்று மத்திய அரசு கருதுகிறது. சில தினங்களுக்கு முன்பு சுமார் ரூ.3,000 கோடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறை உள்பட பல்வேறு துறைகளிலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வாசலைத் திறந்துவிட்டுள்ளனர். வரைமுறையோ கட்டுப்பாடோ இல்லாமல், அன்னிய முதலீடுகளை அனுமதித்துத் தாற்காலிகமாக நிலைமையைச் சமாளிப்பதன் பின்னணியைப் பற்றி அரசு யோசிப்பதாகவே தெரியவில்லை.
பிரதமரிலிருந்து தொடங்கி அரை டஜன் பொருளாதார நிபுணர்கள் அமைச்சரவையில் அங்கம் வகித்தும் சரியான திட்டமிடல் இல்லாததுதான் இந்தச் சரிவுக்குக் காரணம் என்பதை அரசு புரிந்துகொள்ளவே மறுக்கிறது.
சரியான பொருளாதார வளர்ச்சி என்பது - தொழில் பெருகுவதன் மூலம் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, அதனால் அனைத்துக் குடும்பங்களுக்கும் வாங்கும்திறன் அதிகரித்தல், சம்பாதித்த பொருளை அவர்கள் மகிழ்ச்சியுடன் செலவழிப்பதால் அதிகரிக்கும் வணிகம், வணிகத் தேவையால் மேலும் தொழில் வளர்ச்சி என்ற சுழற்சி முறையில் அமைய வேண்டும். அன்னிய நேரடி முதலீடு வந்து குவிந்தால் இந்தியாவில் பணப்புழக்கம் அதிகமான போதிலும் இருப்பவர்-இல்லாதவர், வாங்கும்சக்தி உள்ளவர்- இல்லாதவர் ஆகியோருக்கான இடைவெளிதான் அதிகரித்துக்கொண்டே போகுமே தவிர, அது பொருளாதார வளர்ச்சிக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது.
இந்த இடைவெளியோடு நமது அரசியல்வாதிகளின் ஊழல் பணத்தின் நடமாட்டமும் சேர்ந்து மேலும் ஊறு செய்கிறது என்பது இன்னொரு அவலம்.
அன்னிய முதலீடுகளை அவர்கள் திரும்ப எடுக்கச் செய்துவிட்டால் இந்தியா திவாலாகிவிடும். இல்லையென்றால், வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் அவர்களுக்கு அடிமையாகிவிடும். எதுவாகயிருந்தாலும் அது நல்லதற்கல்ல.
கூட்டணிக் கட்சிகளைக் காரணம் காட்டித் தனது இயலாமையை அரசு நியாயப்படுத்த முடியாது. சிக்கன நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. பிரச்னைக்குத் தீர்வு காண வழி தெரியாமல் அரசு தத்தளிக்கிறது என்பதுதான் உண்மை.

நன்றி-தினமணி தலையங்கம்.

Saturday, 26 May 2012

எது அவசியம் மக்களுக்கு?...


புதிய செய்தி


IPL போட்டிக்காக M.A.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிய கேலரிகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது.


இதே ஸ்டேடியத்தில் 2011இல் உலககோப்பை போட்டிக்காக புதிய கேலரிகள் 110 நாட்களுக்குள் அசுர வேகத்தில் கட்டிமுடிக்கப்பட்டன.



Wednesday, 23 May 2012

இந்திய மக்களுக்கு பாரத பிரதமரின் கடிதம்...


அன்புள்ள பாரத மக்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறோம் அதற்கு பரிசாக பெட்ரோல் விலையை 7.98 ரூபாயாக உயர்த்தி இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி இந்திய மக்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்தோம். (2009-Rs.44.44/- Now 2012-Rs.77.53/-)

அரசியல் பாலபாடம் -1

அம்மா தாயே மன்னிச்சிக்கோமா
அய்யா தலைவா மன்னிச்சிடுங்க


இதுதான் அரசியல் பாலபாடம் விதி எண் -1


அரசியலில் இந்த வார்த்தையை மறக்காமல் வைத்திருக்க வேண்டும் எப்போது வேண்டுமானாலும் அது பயன்படும்,எப்போது என்று கடவுளுக்கு கூட தெரியாது.


1999 இல் பி.எ.சாங்கமா சோனியா காந்தி இத்தாலி நாட்டவர் என்று எதிர்த்தார்.

Sunday, 20 May 2012

தி.மு.க.வின் புதிய கொள்கை பரப்பு செயலாளர்...


பத்திரிகையாளர்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்,அப்போது தான் அவர்கள் தரும் செய்தியும் நடுநிலையோடு இருக்கும்.ஆனால் ஒரு பிரபல பத்திரிகையில் பணிபுரியும் இவர் எப்படி தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளர் ஆனார் என்பது தான் தெரியவில்லை,அதுவும் ராசா திகாரில் இருந்து வெளியில் வரும் போது ''பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!''என்று பேனர் வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்.

பொது ஊடக துறையில் பணிபுரியும் இப்படி தி.மு.க க்கு பேனர் வைக்கும் அளவுக்கு சென்று இருக்க கூடாது.

இதுவரை நல்ல பத்திரிகையாளராக தெரிந்த அவர் இந்த செய்தியை படித்தது முதல் முதல் தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளராக தெரிய ஆரம்பித்தார்.இவர் நிறையமுறை தி.மு.க வை ஆதரித்து எழுதி இருக்கிறார் அப்பொழுதெல்லாம் எனக்கு அவர் தி.மு.க அனுதாபியாகவே தெரிந்தார்.

இனிமேல் அந்த பிரபல பத்திரிகையில் பணிபுரிவதை விட்டுவிட்டு முரசொலியில் சேர்ந்து,தி.மு.க வின் கொள்கைகளை பரப்பலாம்,இப்போது தி.மு.க தொண்டர்களுக்கே கொள்கை என்னவென்று தெரியவில்லை,இவருக்கு நிறைய தெரியும் என்பதால் இதை செய்யலாம்.இவர் ஒரு நல்ல பத்திரிகையாளர் என்கிற நிலையை இழந்து விட்டார்.

தி.மு.க க்கு ஒரு புதிய கொள்கைபரப்பு செயலாளர் கிடைத்து விட்டார்....
பேசாமல் தி.மு.க வில் சேர்ந்து விட்டால் சில வருடங்களில் இவரும் அமைச்சராகி விடுவார்,பின்னாளில் இவருக்கும் யாராவது இப்படி பாராட்டி பேனர் வைப்பார்கள்...

Saturday, 5 May 2012

ஜாதிகள் உள்ளதடி பாப்பா-சே.சுப்பிரமணியன்


ஆயிரம் உண்டிங்கு  ஜாதி

தமிழ் நாட்டில் சென்ற வாரம் முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது
இங்கே விளம்பரங்கள் ஒரு சாம்பிள் தான்.

Thursday, 12 April 2012

வீழ்ச்சிக்கு வழி !...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினால் வேளாண் பணிகள் செய்வதற்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஆகவே, இத்திட்டத்தின் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்குத் தொடுத்த பெரியசாமி (76) என்பவரின் மனுவை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்துவிட்டது.


 இத்திட்ட நடைமுறைகளில் முறைகேடு இருக்குமானால் மனுதாரர் இது குறித்துத் தொடர்புடைய அதிகாரிகளிடம் முறையிடலாம். மாறாக, மத்திய அரசின் திட்டத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Thursday, 29 March 2012

என்ன தான் நடக்கிறது இந்த தேசத்தில்?...

நேற்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட காரணம் தலைமை ராணுவத்தளபதி வீ.கே.சிங் எழுதிய கடிதம் பத்திரிக்கைகளில் வெளியானது தான்.இவரை ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.எந்தவித விசாரணையும் இன்றி நீக்க கோருவது ஒரு தவறான முன் உதாரணம் ஆகும்.

Wednesday, 28 March 2012

உயரதிகாரம் படைத்தவர் யார்?...






செய்தி
"பார்லிமென்டில் உள்ளவர்கள் பெரும்பாலோர், கொலை, கொள்ளைக்காரர்கள்' என, சமீபத்தில் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்தார்,அதை பற்றிய விவாதம் தான் இது.

Monday, 26 March 2012

அரசின் முகத்தில் கரி!


அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாத நிலைமையில், இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கிளம்பியிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொன்ன அதே தலைமை தணிக்கைக் குழுதான் இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10.67 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

Sunday, 25 March 2012

ஜெனீவா தீர்மானத்தில் இந்தியாவின் இரட்டை நிலை...




ஐ.நா வின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்துவிட்டு,இலங்கையை சமாதானப்படுத்த பிரதமர் கடிதம் எழுதி இருப்பது,தமிழர்களாகிய நமக்கு பெருத்த அவமானம்,இதில் இருந்தே தெரிகிறது இந்தியாவின் இரட்டை வேடம்.

Friday, 23 March 2012

தமிழீழப் போராட்டம் பற்றி கருணாநிதி கருத்து




செய்தி 

புலிகள் போராட்டம் சரியானதே,புலிகள் நடத்திய சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது.

தலைவரே சகோதர யுத்தம்னு சொல்லுறீங்களே அது உங்க குடும்பத்தை பத்தி தானே?...