Sunday, 11 November 2012

தற்கொலை தீர்வல்ல – பாகம் 2


கடந்த வாரம் என் நண்பனின் நண்பன் காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்,நல்லவேளை ஒரு வழியாக அவர் காப்பாற்றப்பட்டார்.

இத்தனைக்கும் அவர் ஒரே மகன் அவருடைய பெற்றோருக்கு,ஒருவேளை அவர் காப்பாற்றபடாமல் போயிருந்தால் அவருடைய பெற்றோர்கள் அவரை இழந்து தவித்து போயிருப்பார்கள்.

இத்தனை ஆண்டுகாலம்அவரை பெற்று படிக்க வைத்த பெற்றோரை விட்டு விட்டு,காதலுக்காக தன் உயிரை துறக்க முடிவெடுத்தது தான் காலத்தின் கொடுமை.அவருக்கு பிறகு அந்த காதல் அவரது பெற்றோர்களை காப்பாற்றுமா?

ஒரு பெண்ணுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த உலகத்தில் வாழ தகுதியில்லாதவர் என்று அர்த்தம் இல்லை.

நீங்கள் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன,அவற்றையெல்லாம் விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்வது தீர்வாக இருக்காது.

உங்களை வேண்டாம் என்ற சொன்ன பெண் வருத்தப்படும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை உயர்வாக இருக்க வேண்டும்,அதை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனமான செயல்.

வாழ்க்கையில் எல்லாமே ஒரு அனுபவம் தான்,அதுபோல் காதலையும் அதன் தோல்வியையும் ஒரு அனுபவமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்..

அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு முன்னேறினால் உங்கள் வாழ்க்கை வளமான,உயர்வான வாழ்க்கையாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே....

என்னுடைய முந்தைய பதிவு தற்கொலை தீர்வல்ல...

அருணை வினோத்



2 comments:

  1. நல்லதொரு பதிவு ... ! ஒருவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் யாரோ ஒருவருக்கு பிடிக்காமலா போய்விடும் ... !

    காதல் தோல்வி என்பதற்கு தற்கொலை தீர்வாகாது, விசாலமான பார்வையே இன்றைய இளையவர்களுக்கு தேவை என்பேன்.

    ReplyDelete
  2. love panni parunga appa teriuyum valrada vida tarkolai better nu

    kamal

    ReplyDelete