அடுத்தவன் இரத்தத்தின் மீதே அரசியல் செய்து பழக்கப்பட்டு போன காங்கிரஸ் இப்போது குஜராத் தேர்தலுக்காக அஜ்மல் கசாப்பை அவசர அவசரமாக தூக்கில் போட்டு தனது உடைந்து போன பெயரை நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளது.
குஜராத்தில் தேர்தலில் கிடைக்க போகும் ஒன்று,இரண்டு MLA சீட்டுக்காக இப்படிப்பட்ட கேவலமான காரியத்தை செய்து இருக்கிறது.ஏனென்றால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமாக பிரச்சனையாக பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு மற்றும் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை இந்த அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று குற்றம் சாட்டி தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்,அதுவே பாஜக வின் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக இருந்தது,இப்போது பாஜக வால் அதை செய்ய இயலாது.இப்போது உடனடியாக அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சக பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார்,உள்துறை அமைச்சர் 48 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்,இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை.ஏனென்றால் குஜராத் தேர்தல் மற்றும் அடுத்தவருட பாராளுமன்ற தேர்தல்.
காங்கிரஸ் ஐந்து ஆண்டுகள் செய்த கேவலமான ஆட்சியை மக்களின் அதிருப்தியை திசை திருப்ப முயற்சி செய்கிறது.அதற்கு தான் இந்த கேவலமான வேலை,ஆட்சியை தக்கவைக்க எந்த கேவலமான வேலையையும் செய்ய காங்கிரஸ் தயாராகிவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி.அடுத்தவன் பிணத்தின் மீது அரசியல் செய்யும் கேவலமான வேலையை காங்கிரஸ் செய்கிறது.
அப்சல் குருவையும் தூக்கில் போட்ட பிறகு காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது,அப்போது நாங்கள்தான் இந்த இரண்டு தீவிரவாதிகளையும் தூக்கில் போட்டோம்,இந்தியாவில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து உள்ளோம்,எங்களால் மட்டுமே இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று சொல்லி ஓட்டு கேட்பார்கள்.
எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களுடனும் லாபி அமைத்து 2ஜி அலைக்கற்றையை அதிகம் விலைபோகாமல் தடுத்து,CAG அறிக்கையை தவறு என்று மக்கள் முன்னாள் எடுத்து செல்ல முயற்சி செய்கிறது.இன்னும் சொல்ல போனால் CAG என்ற அமைப்பே தேவையில்லை என்று கூட காங்கிரஸ் அமைச்சர்கள் சொல்லுவார்கள்.இந்த அரசு செய்யும் எல்லா வேலைகளையும் சரி என்று வாதிட ஒரு கூட்டம் இருக்கிறது.
2ஜி ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,காமன்வெல்த் ஊழல்,நிலக்கரி ஊழல் இப்படி எல்லாவற்றிலும் ஊழல் செய்தும்,பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்தியாவை வெளிநாட்டில் அடகு வைத்ததும்,ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதும்,விண்ணை முட்டும் விலைவாசியும்,ஈழத்தில் எம் மக்களை கொன்று குவித்ததும் மட்டுமே இந்த காங்கிரஸ் அரசின் எட்டரை ஆண்டுகால சாதனைகள்.
இவர்கள் இந்த இரண்டு தூக்கு தண்டனைகள் மூலம் எல்லாவற்றையும் மூடி மறைக்க பார்க்கிறார்கள்,காங்கிரசின் கை முழுவதும் இரத்தக்கறை படிந்து இருக்கிறது,இவர்களை தூக்கில் போட்டதால் இல்லை எம் இன மக்களை கொன்று குவித்ததால்.
பிணத்தின் மீதே அரசியல் செய்து பழக்கப்பட்ட கட்சிக்கு வேறு என்ன தெரியும்.புரட்டிப்பாருங்கள் காங்கிரசின் அரசியல் வரலாற்றை எல்லாம் தெரியும்.அவர்களுக்கு தெரிந்தது அது ஒன்று மட்டுமே.
எல்லாவற்றையும் இந்த தேசம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது,இதற்கான முற்றுப்புள்ளியையும் இந்த தேசம் தான் வைக்க வேண்டும்.
அருணை வினோத்.
No comments:
Post a Comment