Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Wednesday, 9 January 2013

சரக்கடிக்க இனாம் தரும் தினமலர்


தினமலரில் வரும் இது உங்கள் இடம் பகுதியில் ஒருவர் தான் சரக்கடிக்கும் பழக்கம் அதன் அனுபவம் பற்றி எழுதியதற்கு, அவர் மேலும் மேலும் சரக்கடித்து மட்டையாக 500 ரூபாய் , பரிசாக கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளது.

Sunday, 11 November 2012

தற்கொலை தீர்வல்ல – பாகம் 2


கடந்த வாரம் என் நண்பனின் நண்பன் காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்,நல்லவேளை ஒரு வழியாக அவர் காப்பாற்றப்பட்டார்.

இத்தனைக்கும் அவர் ஒரே மகன் அவருடைய பெற்றோருக்கு,ஒருவேளை அவர் காப்பாற்றபடாமல் போயிருந்தால் அவருடைய பெற்றோர்கள் அவரை இழந்து தவித்து போயிருப்பார்கள்.

இத்தனை ஆண்டுகாலம்அவரை பெற்று படிக்க வைத்த பெற்றோரை விட்டு விட்டு,காதலுக்காக தன் உயிரை துறக்க முடிவெடுத்தது தான் காலத்தின் கொடுமை.அவருக்கு பிறகு அந்த காதல் அவரது பெற்றோர்களை காப்பாற்றுமா?

Wednesday, 13 June 2012

சகிப்புத்தன்மை வேண்டும்....



இரவு பத்து மணி இருக்கும் சுமார் 30 பேர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் வெகு நேரமாகியும் பேருந்து வரவில்லை,ஒரு பேருந்து சுமார் 10.30 மணிக்கு வருகிறது,சிலர் முன்பக்கமும் சிலர் பின்பக்கமும் பேருந்தில் ஏறிக்கொள்கிறார்கள்,முன்பக்கம் உள்ள சிலர் பணம் கொடுத்து விட்டு பயணச்சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள்,சிலரால் வாங்க முடியவில்லை,அதில் ஒருவர் நீண்ட நேரம் பயணச்சீட்டு வாங்க முயற்சி செய்துவிட்டு,நடத்துனரை பயணச்சீட்டு கொடுக்க முன்னால் கூப்பிடுகிறார்ஆனால் அவர் பின்னால் கொடுத்து வாங்கிக்கொள்ள சொல்கிறார்,அதற்கு அந்த நபர் சுமார் பத்து பேர் இன்னும் பயணசீட்டு வாங்க வேண்டி இருக்கிறது எங்களால் பின்னால் கொடுத்து வாங்க முடியவில்லை ஆகவே நீங்களே வந்து பயணச்சீட்டு கொடுக்கவும் என்கிறார்,அவரும் புலம்பிக்கொண்டே வந்து சுமார் எட்டு பேருக்கு பயணச்சீட்டு கொடுத்து விட்டு செல்கிறார்.

Tuesday, 22 May 2012

துரத்தும் பயணங்கள்...


துரத்தும் இலக்குகள்,
மிக அவசர பயணங்கள்,
வைட்டிங் லிஸ்டில் என் பெயர்,
விமானத்தில் கூட இடமில்லை,
தொடர் வண்டியில் எள் போட இடமில்லை,
வித் அவுட்டில் கூட போகலாமே என்று சொல்லும் பாஸ்,



கடைசியில்
குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்தில் பயணம்,
ஒரு அலுக்கள் குலுங்கள் இல்லாமல்,
வெண்ணை போல் வழுக்கிக் கொண்டு ஓடும் வோல்வோ ,
DVD இல் படு அறுவை திரைப்படங்கள்,





உம்மணா மூஞ்சி சக பயணிகள்,
சிப்சும் கோக்கும் சோறு போல தின்னும்
டீன்ஏஜ் பெண்கள்,
கொள்ளை அடிக்கும் மோட்டல்கள்,

இது
பணமும்,விஞ்ஞானமும் தந்த சொகுசு / வசதி,






ஆனால்
பஸ் ஸ்டாண்டில் அவசரத்துக்கு
ஜன்னலில் கை நீட்டி
ஒரு மாங்கா பத்தை கூட வாங்க
முடியல,




கார்ப்பரேட் ஆபீசில்


ஒரு குழப்பமான சுதேசியாக
நான்?




Friday, 4 May 2012

மதுரைக்கு வந்த சோதனை!...



மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சன்னிதானமாக, சுவாமி நித்யானந்த பரமஹம்சர் நியமிக்கப்பட்டிருப்பது அந்த ஆதீனத்தின் தனியுரிமையாக இருக்கலாம். இந்த நியமனத்துக்குத் தடை விதிக்க நீதிமன்றமும்கூட மறுத்துவிட்டது என்றாலும்கூட, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் எடுத்த முடிவு ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தி இருக்கிறது என்றால், பொதுமக்களைத் திகைப்பிலும் நகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு பழம்பெரும் கோயில் கோபுரம் சரிந்து விழுந்தால், பக்தர்களின் மனங்கள் பதறுவதற்கு ஒப்பானது இந்தத் தவறான வாரிசு நியமன முடிவு என்பதுதான் உண்மை.

Tuesday, 24 April 2012

தேசிய அவமானம்




60% இந்திய மக்கள் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே விவசாயத்தையே நம்பியுள்ளனர்.இந்திய விவசாயமோ பருவ மழையையே நம்பியுள்ளது.பருவமழை போய்த்துபோவது, வறட்சி,வெள்ளம், விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காதது,இடைத்தரகர்களால் சுரண்டப்படுவது மற்றும்,அரசின் தவறான பொருளாதரக் கொள்கைகளால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

Thursday, 19 April 2012

பூகம்ப பயத்தில் குழந்தையின் மனநிலை


சென்ற வாரம் வந்த பூகம்பத்தில் எனது நண்பரின் எட்டு வயது மகள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்,இரவு நேரங்களில் அந்த குழந்தை எழுந்து அம்மா பில்டிங் ஆடுகிறது,என்று கூறி தினமும் அழுகிறாள்,அவளுக்கு எப்பொழுதும் அதை பற்றியே ஒரு நினைப்பு.இதற்கு என்ன காரணம் டிவி சேனல்களில் காட்டப்பட்ட அபரிமிதமான பயமுறுத்தும் தகவல்களும்,சில சேனல்களில் இந்தோனேஷியாவில் அடித்த சுனாமி அலைகள் பற்றிய படங்களுமே, அதையெல்லாம் பார்த்த அந்த சிறிய குழந்தை பயந்து விட்டது,அவள் வீட்டிலும் எப்போது பார்த்தாலும் பூகம்பம் பற்றிய கேள்விகளையே அதிகம் கேட்டு கொண்டு இருக்கிறாள்,பயந்த முகத்துடனே எப்போதும் காணப்படுகிறாள்.மருத்துவரிடம் கூட்டிசென்றும் பலன் இல்லை.

Thursday, 12 April 2012

வீழ்ச்சிக்கு வழி !...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினால் வேளாண் பணிகள் செய்வதற்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஆகவே, இத்திட்டத்தின் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்குத் தொடுத்த பெரியசாமி (76) என்பவரின் மனுவை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்துவிட்டது.


 இத்திட்ட நடைமுறைகளில் முறைகேடு இருக்குமானால் மனுதாரர் இது குறித்துத் தொடர்புடைய அதிகாரிகளிடம் முறையிடலாம். மாறாக, மத்திய அரசின் திட்டத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Monday, 9 April 2012

வலிகளை வெல்லும் காலம்…


வாழ்க்கையில் இன்பம்,துன்பம் மாறி மாறி வரும்.அதுதான் ஒரு சுவாரசியமான வாழ்க்கையாக இருக்கும்.சிலருக்கு வாழ்வில் சில துன்பமான நிகழ்ச்சிகள் நடந்து அவர்களின் வாழ்க்கையே மாற்றி விடும்,மேலும் ஆறாத காயங்களை மனதில் ஏற்படுத்திவிடும்.அதற்கு மருந்து இல்லை.காயங்களுக்கு மருந்து கால மாற்றம் மட்டுமே.


காலம் எல்லா வகையான காயங்களுக்கும் மருந்து போடும்.அதற்கு ஆகும் நேரம் மட்டுமே முன்,பின் இருக்கும்.அதற்குள் நமக்கான வாய்ப்புகள் ஓடிவிடும்.

Wednesday, 4 April 2012

மறித்து போகிறதா மனிதாபிமானம்?..


சில நாட்களுக்கு முன் 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி சென்னை கடற்கரையில் தற்கொலைக்கு முயன்றார்,பின் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஒரு முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

80 வயது பாட்டிக்கு தற்கொலை செய்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? அப்படிப்பட்ட மனநிலைக்கு அவர் செல்ல காரணம் என்ன...

Wednesday, 21 March 2012

யார் ஏழைகள்?...



ஒரு நாளைக்கு ரூ22.42 செலவிடுவோரும் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ28.65 செலவிடுவோரும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு.

கிராமங்களில் ஒரு மாதத்துக்கு ரூ672.8 செலவிடும் சக்தி படைத்தோர்களும், நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு ரூ859.6 செலவிடும் சக்தி படைத்தோர்களும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்ட குழு.

Thursday, 8 March 2012

மகளிர் தின வாழ்த்துக்கள்....




சோதனைகளை வென்று சாதனை படைக்கும் அனைத்து மகளிருக்கும் "மகளிர் தின வாழ்த்துக்கள்"