மெரினா கடற்கரையில் வாக்கிங் போனவர்களிடம் மது விலக்கு குறித்து துண்டு பிரசுரங்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
ஏன் அய்யா நீங்க மெரினா கடற்கரைக்கு எல்லாம் போய்கிட்டு உங்க வீட்டு பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக் கடைக்கு குடிக்க வரும் குடிமகங்களிடம் பிரச்சாரம் பண்ணலாமே....ஆனா யாரு அந்த துண்டு பிரசுரங்களை வாங்குவது....அவ்வளவு ஏன் உங்க கட்சிகாரர்கள் கூட வாங்கமாட்டர்கள்...
நீங்களும் ரொம்ப நாட்களாகவே மது கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த போவதாக சொல்லி வருகறீர்கள்,ஆனால் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை.நாங்களும் அப்படி ஒரு போராட்டத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம்.முதலில் நீங்கள் திண்டுக்கல் பூட்டு நிறைய வாங்குக...அப்புறம் நாங்கள் நம்புகிறோம்.
அப்படி ஒருவேளை நீங்கள் மது கடைகளை பூட்டிவிட்டாள்,தேசிய அளவில் நீங்கள் பேசப் படுவீர்கள்,(எல்லாம் ஒரு விளம்பரம் தான்)ஏன் உங்கள் கட்சி தொண்டர்கள் கூட உங்களை அதிகமாக பேசுவர்கள் (என்ன பேசுவாங்க?).பெட்ரோல் கிடைக்காமல் போனால் எப்படி மக்கள் பாதிக்கபடுவர்களோ அதை விட மிகப்பெரிய அளவில் குடிமக்கள் பாதிக்கபடுவர்கள்.அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது...நீங்கள் என்று போராட்டம் நடத்துவீர்களோ அன்று தான் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அமோகமாக நடக்கும்.இதனால் உங்களுக்கும் ஒரு விளம்பரம் டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு விளம்பரம்.(அய்யாவை ஏன் டாஸ்மாக் விளம்பர தூதுவராக நியமிக்க கூடாது?...)
ஒன்று மட்டும் மறுக்கமுடியாத உண்மை தமிழ்நாட்டில் இனிமேல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூடமுடியாது.அது மட்டும் நிச்சயம்....
அய்யாவை டாஸ்மாக் விளம்பர தூதுவராக நியமிக்க கோரி அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்....யாரு எழுதுவது எல்லாம் அவங்க கட்சிக்காரர்களே எழுதுவாங்க...
தமிழ்நாட்டில் இனிமேல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூடமுடியாது... உண்மை தான்...
ReplyDeleteடாக்டர் இராமதாஸால் மூட வைக்க முடியும் என்றே தோன்றுகிறது. மதுவிலக்கிற்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் ஒரே தலைவராகத்தான் அவர் தெரிகிறார் இன்று எனது அதிமுக கட்சியும் கூட அவருக்குப் பாராட்டு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியல் சூழ்நிலைகளுக்கு அப்பாற்ப் பட்டு மது அரக்கனை ஒழிக்க நானும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
ReplyDeleteஅ.கோட்டை மாணிக்கம்
திண்டுக்கல்