சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சென்ற மாத இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் இலங்கையில் தமிழர்கள் வாழும் கிழக்கு பகுதியில் சுமார் 15,000 பேரை காணவில்லை என்றும் உண்மையான கணக்கு அதை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.கடைசிகட்ட போரின் போது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையின் பல பகுதிகளில் செயல்பட இலங்கை அரசு தடை விதித்தது.
செங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஈழத்தமிழர்கள் சுமார் 15 பேர் சில கோரிக்கைகளை (அடிப்படை வசதி) வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.அதில் 7 பேர் மிக கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
மேற்சொன்ன இந்த இரண்டு சம்பவங்களை பற்றியும் தமிழகத்தில் உள்ள யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.இதையெல்லாம் விட்டுவிட்டு நான்கு இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் போர் பயிற்சி கொடுப்பதை தடுத்து நிறுத்திவிட அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்கள்,இவர்களால் கடைசியில் இடத்தை மாற்றி இந்தியாவின் வேறொரு பகுதியில் பயிற்சி கொடுக்கிறார்கள் அவ்வளவு தான்.கடைசி கட்ட போரில் இந்தியா தான் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியும் ஏராளமான ஆயுதங்களை கொடுத்து அந்த போரை நடத்தியது,அதை இன்றைய எதிர்கட்சியும் நேற்றைய ஆளும் கட்சியான தி.மு.க கேட்டதா இல்லை,அந்த நேரத்தில் அவர்கள் குடும்பத்துக்கு அமைச்சர் பதவி வேண்டி டெல்லியில் தி.மு.க பிச்சை எடுத்தது கொண்டு இருந்தது .நேற்றைய எதிர்கட்சியும் இன்றைய ஆளும் கட்சியான அ.தி.மு.க கேட்டதா இல்லை,நாடாளுமன்ற மன்ற தேர்தலில் நாங்கள் வென்றால் தனித் தமிழ்ஈழம் அமைய பாடுபடுவோம் என்று மேடைக்கு மேடை முழங்கிய அ.தி.மு.க,சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த பிறகு அது அயல்நாட்டு பிரச்சனை அதில் நாங்கள் தலையிட முடியாது என்று ஜாகா வாங்கியது.
தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளின் கடமை பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் எழுதுவதோடு முடிந்து விடுகிறது.அவரும் கடமைக்கு எல்லா கடிதங்களையும் வாங்கி வைத்துகொள்வார்.
ஆட்சியில் இருக்கும் போது அரை மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதோடு முடிந்து விட்டது தி.மு.க வின் கடமை.ஆட்சி போன பிறகுதான் தி.மு.க வுக்கு தமிழர்கள் நினைவே வருகிறது.இந்த டேசோவினால் ஒன்றுமே நடக்க போவதில்லை என்பது உலகறிந்த உண்மை.தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடவே ஈழப் பிரச்னையை பயன்படுத்துகின்றன.தமிழின தலைவர்,தமிழின தளபதி என்று சொல்லிக் கொள்கின்ற யாரும் ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை அவர்கள் கொத்துக் கொத்தாய் சாகும் போது வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.இவர்கள் யாருக்கும் தமிழின தலைவர்,தளபதி என்று சொல்லி கொள்கின்ற அருகதையே கிடையாது.
ஒரு சில நல்ல தலைவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் இதுவரை ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது கிடையாது.கட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகளாக தமிழர்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கிறார் அவர் குரல் தமிழர்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்க கூடாது என்று அவரை திட்டமிட்டு தோற்கடித்தார்கள்.தமிழர்களை வைத்து இரண்டு பெரிய கட்சிகளும் அரசியல் செய்கிறார்கள்.இது அவர்களுக்கு தான் நன்மையே தவிர ஈழத் தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் கிடைக்காது.
இலங்கையை தான் நம்மால் ஒன்றும் கேட்க முடியவில்லை ஆனால் இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகள் நல்ல முறையில் வாழ ஒரு வழியை நம்மால் இன்று வரை ஏற்ப்படுத்தி கொடுக்க முடியாமல் இருப்பது தான் தமிழகத்தின் அவலநிலை....
No comments:
Post a Comment