டெசோ ஒன்றுமே செய்யப் போவதில்லை,கருணாநிதி அரசியல் செய்வதற்கு வேண்டுமானால் பயன்படலாம்,அது ஈழத் தமிழர்களின் ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட பதில் சொல்லப் போவதில்லை.
ஆட்சியில் இருக்கும் போது ஈழத் தமிழர்களுக்காக ஒன்றுமே செய்யாத கருணாநிதி இப்போது ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் செய்கிறார்.
ஒரு இனத்தின் ஓலக்குரல் தேசம் முழுக்க கேட்ட போது அதற்கு காரணமான கேடு கெட்ட காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து பதவிக்காக டெல்லியில் பிச்சை எடுத்தவர் என்று டெசோ மாநாடு நடத்துகிறார்.
தயவுசெய்து ஈழத் தமிழர்களுக்காக போராடுபவர் என்று மட்டும் சொல்லி கொள்ளாதீர்கள் அந்த அடையாளத்தை நீங்கள் இழந்து பல வருடங்களாகி விட்டது.இதுஉங்கள் அரசியல் லாபத்துக்காக நடத்தப்படும் மாநாடு,வேண்டுமானால் தி.மு.க மாநாடு என்று பெயர் மாற்றிக்கொள்ளுங்கள்.
எம் இன மக்கள் சுதந்திரமாகவும்,தன்மானத்துடன் வாழ தனித் தமிழ் ஈழம் தான் தீர்வு அதில் மாற்று கருத்து என்ற பேச்சுக்கே இடம்மில்லை,அதை வலியுறுத்தாத மாநாடு ஈழத் தமிழர்களுக்கான மாநாடாக இருக்கவே முடியாது.
ஐந்து முறை முதல்வராக பதவி வகித்தீர்கள்,மூன்று முறை மைய அரசின் முக்கிய அங்கமாக உங்கள் கட்சி இருந்து இருக்கிறது (இப்போதும் கூட),அப்போதெல்லாம் இதை பற்றி பேசாத நீங்கள் இப்போது ஏன் பேசுகிறீர்கள்?...இதனால் நீங்கள் அடையப்போகும் பலன் என்ன?..ஆதாயம் இல்லாமல் நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டீர்கள்.
குறைந்தபட்சம் உங்களால் எம் இன மக்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத் பெற்றுத் தர முடிந்ததா?...நீங்கள் எல்லாம் தமிழினத் தலைவராம்? எங்கு போய் சொல்வது இந்த கொடுமையை?...
இந்தியாவில் உள்ள எம் இன மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்தி தர முடியாதா உங்களால் தான் ஈழத்தில் உள்ள எம் இன மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கப் போகிறதா?...
தயவு செய்து இனிமேலாவது எம் இன மக்களின் வாழ்க்கையை பயன்படுத்தி அரசியல் செய்யாதீர்கள்...
No comments:
Post a Comment