Sunday, 4 March 2012

அரவான்



ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதை கங்களை கையாள ஒரு தைரியம் வேண்டும்,அந்த தைரியம் வசந்தபாலனுக்கு இருக்கிறது,அதுவும் ஒரு பீரியட் படம் எடுப்பதற்கு.அதற்காக வசந்தபலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


18 நூற்றாண்டில் தென் தமிழகமான மதுரையை சுற்றி வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார் வசந்தபாலன்.படம் முழுக்க வசந்தபாலனின் உழைப்பு தெரிகிறது.படத்தின் முதல் பாதியை பசுபதி சுமக்கிறார், இரண்டாம் பாதியை ஆதி சுமக்கிறார்.பசுபதியின் நடிப்பும் உடல் மொழியும் அசாத்தியமானது.படத்தில் மிக நுட்பமாக, களவாட செல்லும் முன் அவர்களின் கருப்பு சாமி வழிபாடு,வானத்தில் வெள்ளி பார்ப்பது,வீட்டுக்குள் சென்று சத்தமில்லாமல் திருடுவது,மாட்டிகொண்ட பின் சண்டையிடுவது,விதவிதமகா ஒலி எழுப்புவது,தப்பித்து ஓடுவது என்று மிக தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.



ராணி நகையை திருடியவனை கண்டுபிடிக்க போகும் போது,அதை திருடியது ஆதி தான் என்று தெரிந்து,அவனிடம் இருந்து நகையை மீட்டு கொடுப்பதும்,பிறகு அவனிடம் நட்பு கொண்டு,அவனை தன் ஊரில் ஒருவனாக சேர்த்து கொள்வது,கடைசியில் ஆதியை பலி ஆளாக கொண்டு செல்லும் போது காப்பாற்றுவது,ஆதி சாகும் தருவாயில் தன் மகனை பசுபதி காட்டி இவன ஒரு நல்ல காவ காரணா மாத்தணும்னு சொல்லும்போது களவாணி கிட்ட போயி காவ காரணா வளக்க சொல்றியே என்று சொல்லும் போதும் படம் முழுக்க பசுபதி படத்தை தாங்கி பிடிக்கிறார்.இந்த படத்திற்கு பசுபதி ஒரு மிக சிறந்த தேர்வு.
ஆதி களவாட செல்லும் வீட்டினுள் ஒரு பெண் தூக்கில் தொங்க,அவளை காப்பற்ற முனைப்பதும்,அவள் இறந்தவுடன் களவடாமல் வருவது,(இழவு வீட்டில் களவு கூடாது என்பது போல்),கன்று குட்டியை தூக்கிகொண்டு ஓடுவது,திருடபோன இடத்தில் மாட்டிகொண்ட பசுபதியை காப்பாற்றுவது,மாட்டை அடக்கி பசுபதியை காப்பாற்றுவது,தன் ஊரின் மீதான கொலை பழியை தீர்க்க போராடுவது,கடைசியில் தன்னை வெட்ட போகும் தான் நண்பன் மகனிடம் நல்லா இருக்கியா என்று கேட்பது,உன் கையில் ரத்தம் வேண்டாம் என்று தானே அருவளால் வெட்டி கொள்வது,என்று படம் முழுக்க ஆதி மிளிர்கிறார்.


அருமையான ஒளிப்பதிவு பல இடங்களில் பிரமிக்கவைக்கிறது, காடுகளிலும்,திருடிக்கொண்டு ஓடிவரும் இடங்களிலும்,இரவு நேர ஒளிப்பதிவும் அருமை.


பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது,பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை ஒரு பாடலை தவிர (நிலா நிலா போகுதே).பாடல்கள் எதுவும் திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை.


தாசி வீடு  காட்சிகள் எல்லாம் சரியாகதான் இருக்கிறது,ஆனால் தாசி கதாபாத்திரத்தின் உடை அமைப்புதான் இந்த கால உடை அலங்காரம் போல இருக்கிறது,மேலும் ஆதியை 9 வருடங்களுக்கு பிறகு காட்டும் போது ஆதியின் மனைவி தன்ஷிகா,நண்பன் மனைவியான பெண்மணி,ஒரு காமெடி (சிங்கம்புலி) கதாபாத்திரம் எல்லோரும் 9 வருடங்களுக்கு பிறகும் அப்படியே இருப்பது போல் காட்டப்படுகிறது,கொஞ்சம் வயதானவர்களாக காட்டி இருக்கலாம்.


தன்ஷிகா நன்றாகவே நடித்து இருக்கிறார்,ஆதியுடன் காதல்கொள்ளும் போதும்,கல்யாணம் செய்யும் போதும்,ஆதியை வீட்டுக்கு அழைக்கும் போதும்,பாடல் கட்சிகளிலும்,காதல் கட்சிகளிலும்,ஆதி சாகும் போதும் இன்னும் ஒரு வருசம் உன்னால இருக்க முடியலையா என்று கேட்கும் போதும், தன்ஷிகா தன்னுடைய கதாபாத்திரத்தை நன்றாகவே செய்து இருக்கிறார்.
படத்தில் சின்ன சின்ன கிளை கதைகள் வருகின்றன,இவையாவும் திரைக்கதையுடன் ஒன்றி வருவதுதான் படத்தின் மிகப்பெரிய பலம்.அருமையான திரைக்கதை அமைப்பு.


படத்தின் கதை இந்த வருடம் சாகித்ய அகடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் அவர்களின் காவல் கோட்டம் என்ற நாவலின் ஒரு பகுதி தான்,எனவேதான் அவரே வசனமும் எழுதி இருக்கிறார்.சில காட்சிகளில் வசனங்கள் மனதை கவர்கின்றன.அவற்றில் சில


தூக்கம் வர்றவன் காவலுக்கு போககூடாது,தும்மல் வர்றவன் களவுக்கு வரக்கூடாது.


அவுத்துவிட மாடு மாதிரி சுத்துராலே எவன் கூடவோ படுத்து இருப்பாள்னு நினைகிறையா,இல்ல குள்ளமா இருக்கேனு நினைகாதே பத்து புள்ள பெத்து தாரேன்.


களவுல இருந்து தான் காவல் பிறக்கும்,என்ற வசனங்கள் அருமை.


கடைசியில் 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் மனித பலி வழக்கம் பிரிடிஷ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது என்ற வாசகமும்,இன்னும் 83 நாடுகளில் மரண தண்டனை வழக்கத்தில் உள்ளது என்றும் மரண தண்டனையை ஒழிப்போம் என்ற வாசகமும் இடம் பெறுகிறது.


இதுபோன்ற பீரியட் திரைப்படங்களை நாம் வரவேற்கவேண்டும்,ஏனென்றால் அப்போதுதான் இன்றைய இளைய சமுதாயத்துக்கு,நம் முந்தைய சமுதாய மக்களின் வாழ்க்கை முறை,வீரம்,காதல்,வன்மம் போன்றவை தெரியவரும்,எனவே இது நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.


இந்த படம் மூலம் வசந்தபாலன் ஒரு சிறந்த இயக்குனர் என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள் வசந்தபாலன்.



அரவான் - கள்ளர்களின் வீர வரலாறு (வன்மம் கலந்த வரலாறும் கூட)



அருணை வினோத்


படக்குழுவினர் விவரம்
நடிகர்கள் – ஆதி,பசுபதி,கரிகாலன்,சிங்கம்புலி,திருமுருகன்,கபீர் பேடி,விஜய்ச்சந்தர்,பரத்.
நடிகைகள் – தன்ஷிகா,அர்ச்சனா கவி,அஞ்சலி.ஸ்வேதா மேனன்.
இசை - கார்த்திக்
ஒளிப்பதிவு- சித்தார்த்
எடிட்டிங் – பிரவீன் & ஸ்ரீகாந்த்
கதை,வசனம் – சு.வெங்கடேசன்
திரைக்கதை,இயக்கம் – வசந்தபாலன்
தயாரிப்பாளர் – சிவா


No comments:

Post a Comment