செய்தி
"பார்லிமென்டில் உள்ளவர்கள் பெரும்பாலோர், கொலை, கொள்ளைக்காரர்கள்' என, சமீபத்தில் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்தார்,அதை பற்றிய விவாதம் தான் இது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நம் நாட்டின் உயர் அதிகார படைத்தது பார்லிமென்ட். இதன் உறுப்பினர்களை விமர்சிக்கும் ஹசாரே குழுவினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பார்லிமென்ட்டின் கவுரவத்தை குலைக்கும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது,என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
விவாதம்
பார்லிமென்டில் உள்ள மூன்றில் ஒரு பங்கு M.P கள் குற்ற பின்னணி உடையவர்கள்,அதாவது மொத்த உறுப்பினர்கள் 543 பேரில் 162 பேர் குற்ற பின்னணி உடையவர்கள்.அதில் 75 பேர் கொடூர குற்ற பின்னணி உடையவர்கள் (கொலை,கற்பழிப்பு,ஆள் கடத்தல்) போன்ற வழக்குகளில் நீதிமன்றமே நேரடியாக தலையீட்டு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.
நாட்டின் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தது பாராளுமன்றமாக இருக்கலாம்,அதற்காக அங்குள்ளவர்கள் எல்லாம் உயரதிகாரம் படைத்தவர்கள் ஆகிவிடமுடியாது ,இந்திய ஜனநாயகத்தில் மக்களே உயரதிகாரம் படைத்தவர்கள்,அங்குள்ளவர்கள் மக்களால் தேர்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பதை மறந்து விடக்கூடாது.
பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் மக்களின் வேலைகாரர்களே தவிர எஜமானர்கள் அல்ல...
தேர்தல் வரும் போது ஓட்டு கேட்டு மக்களிடம் தான் வரபோகிறர்கள் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள்,ஏனென்றால் இந்த தேசத்தின் மிகப்பெரிய வியாதி நியாபகமறதி என்று அவர்களுக்கு தெரியும். இல்லையென்றால் எவ்வளவு குற்ற பின்னணி உடையவர்களை பாராளுமன்ற உறுபினர்களாக தேர்ந்து எடுப்பார்களா?...
இதில் கொடுமை என்னவென்றால் உத்திர பிரதேச மாநிலத்தில் 48 கொலை வழக்கு ,12 ஆள் கடத்தல் வழக்கு,32 கொலை மிரட்டல் வழக்கு என்று மொத்தம் 92 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ராஜா பையா என்பவர் சிறைத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டு இருக்கிறார்… (வாழ்க ஜனநாயகம்!)
பாராளுமன்றத்தில் மைக்கை பிடுங்கி அடிக்கும்போதும்,நாற்காலிகளை உடைக்கும்போதும்,வேட்டிகளை உருவும் போதும்,பெண்களின் சேலைகளை உருவும் போதும் போகாத மாண்பு இப்போது போய்விட்டதா?...இவர்களுக்கெல்லாம் மாண்பு,கவுரவம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?..
இவர்கள் யாரும் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை,அவர்கள் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கும்,அதிகாரத்தை பயன்படுத்தி கோடி,கோடியாக கொள்ளை அடிப்பதேற்குமே...
தேர்தல் சட்ட சீர்திருத்தம்,லோக்பால் மசோதா போன்றவைகள் எல்லாம் நிச்சயம் வராது,வரவும் விடமாட்டார்கள்...
எப்போதுமே உண்மையை சொன்னால் வலிக்கத்தான் செய்யும்...
இவை எல்லாவற்றுக்கும் தீர்வு மக்களிடம் தான் இருக்கிறது...வேறென்ன சொல்ல...
அருனைவினோத்
No comments:
Post a Comment