சில மாதங்களுக்கு முன்னால் இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே இப்படி சொன்னார் "இந்த போரை நாங்கள் இந்தியாவின் சார்பாக வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறோம்" என்றார்.இதற்கு இந்திய அரசு இதுவரை அந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள்,அதைத்தான் இந்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது.
தோழர் நல்லகண்ணு ஒரு விவாதத்தின் போது சொன்னார்" எங்களுடைய வரி பணத்தில், எங்கள் சகோதரர்களை கொல்ல ஆயுதம் வாங்கி கொடுத்தீர்கள், எங்கள் சகோதேரர்களை கொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்றார்.
ஒரு உயிர் பலிக்கு,லட்சகணக்கான தமிழ் மக்களை போர் என்ற பெயரில் கொன்று குவித்தீர்களே?...உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?...அந்த லட்சகணக்கான மக்களின் இரத்த கறை உங்கள் கைகளில் மட்டுமல்ல,இந்த தேசம் முழுக்க படிந்து இருக்கிறது. அந்த பாவம் உங்களை சும்மா விடாது.
சர்வதேச தமிழ் சமுதாயம் கேட்கும் எந்த அம்சங்களும் இந்த அமெரிக்க தீர்மானத்தில் இல்லாத போதும்,நாம் ஏன் அந்த தீர்மானம் நிறைவேற போராட வேண்டும்,இந்த தீர்மானம் நிறைவேறினால்,இலங்கைக்கு ஒரு அழுத்தம் உண்டாகும் அதன் காரணமாக இனிமேலாவது தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் இருக்காது,இல்லையென்றால் இலங்கை தமிழன் நாதி அற்றவனாவான் .
நாம் கேட்பது சுயமான இலங்கை தலையீடு அற்ற ஒரு பன்னாட்டு குழு இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களையும்,மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க வேண்டும் என்பதே,இதை செய்ய அனுமதி மறுக்கிறது இலங்கை அரசு. இதற்கு இந்தியாவும் உடந்தை.
ஆசியக்கண்டத்தில் தன்னை ஒரு வலிமை மிக்க நாடக காட்டவே இந்த நீர்த்து போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருகிறது,மேலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இருக்கும் நெருக்கத்தை குறைக்கவும், சீனா ஆசியக்கண்டத்தில் வலிமைமிக்க நாடக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தான்,அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நியாயப்படி பார்த்தால் ஒரு வலிமை மிக்க தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வைத்திருக்க வேண்டும்.ஆனால் இந்தியா அதை செய்ய தவறிவிட்டது. மற்றவர் கொண்டுவந்ததையும் ஆதரிக்கவும் யோசிக்கிறது
ஒரு கட்சியின் தலைவர் சென்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இப்படி சொன்னார்"நாங்கள் வெற்றி பெற்றால் தனி தமிழ் ஈழம் அமைக்க பாடுபடுவோம்"என்றார்.ஆனால் இப்போது சட்ட மன்ற தேர்தலில் வென்று முதல்வர் ஆன பிறகு சொன்னார் "அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை” எனவே தமிழகம் தலையிட முடியாது என்றார்.இப்போது இந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்,ஆக இது அரசியல் சந்தர்ப்பவாதம்,அவருக்கு தமிழர்களை பற்றி கவலையில்லை,அவருக்குதேவை ஆட்சி அதிகாரம் அதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவார்.
இலங்கை போர் நிறுத்ததிற்காக எதுவுமே செய்யாமல் தனது வாரிசுகளுக்கு பதவி கேட்டு டெல்லியில் பிச்சை எடுத்தவரும்,போர் நிறுத்ததிற்காக 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ஒரு மாபெரும் நாடகம் நடத்தி தனது வேலையை முடித்து கொண்டார். கட்சிகாரர்களால் தமிழன தலைவர் என்று அழைக்கபடுபவர் இந்த விசயத்தில் தமிழன துரோகி ஆனார்.
தமிழ் மக்களுகாக தன் குடும்பத்தை இழந்த அவர் தமிழன தலைவரா?...இல்லை என்னக்கு மக்களை விட குடும்பமே முக்கியம் என்கிற இவர் தமிழன தலைவரா?...
இன்று காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இவர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிறார்.ஒரு வேளை இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தால்,உடைந்த தனது அடையாளத்தை நிலை நாட்ட,அவர் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறலாம்.ஆக இதுவும் அரசியல் சந்தர்ப்பவாதம்,அவருக்கு தமிழர்களை பற்றி கவலையில்லை,அவருக்கு முக்கியம் அவர் குடும்பம் மட்டுமே.
ஒரு வேளை இந்த தீர்மானத்தில் இந்தியா,இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்தால்,இலங்கை இந்த போரில் இந்தியாவின் பங்கு பற்றி பேசவேண்டிவரும் அப்போது இந்தியாவின் நிலைமை மோசமாகும்.
மாறாக இந்த தீர்மானத்தில் இந்தியா,இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால்,தமிழ்நாட்டு மக்கள் கொதித்து எழுவார்கள்,அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்தை விளைவிக்கும்.சர்வதேச தமிழ் சமுதாயம் காறி உமிழும் அதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதனால் இந்தியா திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் உள்ளது.
ஆக இந்த நாட்டில் யாருக்கும் தமிழ் மக்களை பற்றி கவலை இல்லை,அவர்களுக்கு அரசியலும்,குடும்பமும்,பணமும் மட்டுமே முக்கியம்.எல்லாமே சந்தர்ப்பவாதம்,யாருக்கும் வெட்கமில்லை,யாருக்கும் தமிழன் என்ற உணர்வு இல்லை.
நாம் வாழும் இந்த காலகட்டத்தில் தான் இந்த கொடுமைகள் நடத்து இருக்கிறது,அதுவும் நம் நாட்டின் உதவியால் அந்த இரத்தக் கறை நம் கைகளிலும் படிந்து இருக்கிறது,ஆகவே நாமும் குற்றவாளியே?..
இந்த தீர்மானத்தில் இந்தியா,இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால்,தமிழராகிய நாம் இந்திய குடிமகனாக இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.
ஒரு மண்ணின் விடுதலை போராட்டம் என்றுமே தோற்றுப்போகாது...(இதுதான் உலக
வரலாறு) இன்று வேண்டுமானால் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கலாம்,நிச்சயம் இது தொடரும்...
எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல
வேண்டும்...
அருணை வினோத்
No comments:
Post a Comment