Friday, 2 March 2012

உரங்களுக்கான மானியம் 20 % குறைப்பு



கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி,ஆனால் அந்த முதுகெலும்பை உடைக்கதுடிக்கிறது மத்திய அரசு,
உரங்களுக்கான மானியங்களை குறைப்பதன் மூலமும் மரபணு மாற்றம் செய்த விதைகளை அமெரிக்க நிறுவனம் மூலம் இறக்குமதி செய்ய துடிப்பதன் மூலமாகவும்.

ஏற்கனவே விவசாய பொருட்களின் விலை உயர்வு ,நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் குறைவு ,கூலி உயர்வு போன்ற காரணங்களால் விவசாய துறை நலிவடைந்து கொண்டு இருக்கிறது. மானியம் குறைக்கப்படுமானால் உரங்களுக்கான விலை மேலும் உயரும்.


ஏற்கனவே விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் மூலம் பிளாட்டுகளாக விற்கப்படுகின்றன.  
 
மேலும் விவசாயம் பொய்த்துபோய் விவசாயிகள் தற்கொலை (விதர்பா) செய்வது கொள்வது தெரிந்த பிறகும் இந்த அரசு மானியங்களை குறைக்க முன்வந்து இருக்கிறது.

நாம் எந்த அளவுக்கு தொழில் துறைக்கு முன்னுரிமை கொடுக்கிறோமோ அதை விட அதிகமாக விவசாயத்துறை முக்கியத்துவம் தரப்படவேண்டும்,இல்லையென்றால் பசுமை புரட்சி செய்த நாம் உணவுக்காக மற்றவரிடம் கையேந்த வேண்டிய நிலை வரும்...அதை தான் இந்த அரசும் விரும்புகிறது என்றே நினைக்க தோன்றுகிறது...  

அருணை வினோத்
 


No comments:

Post a Comment