சோனியா மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருக்கிறார்.அது என்னமோ தெரியலைங்க எல்லா அரசியல்வாதிகளும்,சினிமா நடிகர்களும்,தொழில் அதிபர்களும்,கிரிக்கெட் வீரர்களும் மருத்துவம் பார்க்க வெளிநாடு சென்றுவிடுகிறார்கள்.
அப்ப இந்தியாவில் உயர்தர மருத்துவ மனைகளும்,மருத்துவர்களும் இல்லையா?....
உங்ககிட்ட நிறைய பணம் இருக்கு அதனால் உயர்தர மருத்துவ சிகிச்சை வெளிநாடுகளில் கிடைகிறது.ஆனா எங்களை போன்ற சாமானிய மக்களுக்கும்,வறுமைகோட்டுக்கு கீழே வாழும் மக்களும் உயர்தர மருத்துவ சிகிச்சை இந்தியாவில் கிடைக்காதா?...
வசதிபடைத்தவர்களுக்கு வெளிநாட்டு சிகிச்சை ....
சாமானிய மக்களுக்கு என்ன சுடுகாடா?....
எல்லா மக்களுக்கும் இலவசமாக கிடைக்கவேண்டிய கல்வியும்,மருத்துவமும் வியாபாரமாகிவிட்ட நிலையில்உயர்தர மருத்துவ சிகிச்சையெல்லாம் இலவசமா கிடைக்கிறது எல்லாம் நடக்கிற காரியமா?....
இதையெல்லாம் செய்யாமல் இந்தியா 2020 ல் வல்லரசு ஆகும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
எப்போது இந்த நிலை மாறும்?...எல்லா மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை எப்போது கிடைக்கும்?...
அருணை வினோத்
vinoth super no more words to comments
ReplyDelete