இரு வங்கி கொள்ளைக்காக, (33 லட்சம் ரூபாய்க்காக), எந்த ஒரு விசாரணையும்
செய்யாமல், சந்தேகத்தின் பேரில் 5 நபர்களை போலீஸ் சுட்டு கொன்று இருக்கிறது. போலீஸ்
சந்தேகப்படும் ஒரு நபரின் புகைப்படம் மட்டும் வெளியிடப்பட்டு 10 மணி நேரத்திற்குள்,
அவர்கள் கொல்லப்பட்டு இருகிறார்கள். நம் அரசியல் அமைப்பு சட்டம் எப்போதும்
சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுத்தும்.
ஏனென்றல் "ஒரு நிரபராதி கூட தண்டிக்க பட
கூடாது" என்பதற்காக.
கமிஷனர் பேட்டியின்படி,அவர்களுக்கு 12 .30 மணிக்கு தகவல் கிடைகிறது, 1 .00 மணிக்கு அங்கு செல்கிறார்கள் 1 .30
மணிக்குள் என்கவுண்டர் முடிகிறது, ஆனால், அங்குள்ள பொதுமக்கள் கருத்துப்படி 10௦ மணிக்கே போலீசார் அங்கு வந்து விட்டதாகவும், எல்லா மக்களையும் வீட்டுக்குள் செல்லுமாறு கூறியுள்ளார்கள். பிறகு 1 .30 மணி அளவில் எல்லாம் முடிந்து விட்டது, ஆக இந்த என்கவுண்டர் போலீசால்,திட்டமிட்டு,மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட கொலை. (It was preplanned and well executed murder).
போலீஸ் தன்னுடைய பெயரை நிலை நிறுத்தவும், சிலரின் பதவி நாற்காலிகளை காப்பாற்றிகொள்ளவும்(கொல்லவும்),திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை.
கமிஷனர் பேட்டியின்படி, "நாங்கள் சுற்றி வளைத்தோம்,சரணடைய வாய்ப்பு கொடுத்ததோம்,அவர்கள் சரணடையாமல் எங்களை சுட்டார்கள்,நாங்கள் திருப்பி சுட்டோம்(தற்காப்புக்காக),எங்களையும் பொதுமக்களையும் காப்பாற்றிக்கொள்ளவே" என்றார். பொதுமக்கள் தான் 10 மணிக்கே போலீஸ் அப்புறபடுதிவிட்டதே,அப்புறம் எப்படி இரவு 1 மணிக்கு பொதுமக்களை காப்பாற்ற சுட்டார்கள்?...
இதில் இரு போலீசார் காயம் பட்டார்கள்,ஒருவர் சொல்கிறார் ஜன்னலில் எட்டி பார்க்கும்போது கொள்ளையர்கள் கத்தியால் வெட்டிவிட்டார்கள் என்று,ஆனால் கமிஷனர் சொல்கிறார் துபக்கியால் சுட்டார்கள் என்று ,ஒரு பொய்யை கூட சரியாக சொல்லமுடியவில்லை அவர்களால்.
அவர்கள் கொள்ளையடிக்கும் போது யாரையும் காயப்படுத்தவோ,கொலை செய்யவோ இல்லை, ஆனால் அவர்கள் எந்த விசாரணையும் இன்றி கொல்லபட்டார்கள்.இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல்...
இந்தியாவில் 150௦ பேர் கொலைகளுக்கு காரணமான அப்துல் கசாப் (26 /11 ) இன்றும் ஜெயிலில் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறான்.ஆனால் 33 லட்சம் ருபாய் கொள்ளைக்காக, 5 நபர்களை(உயிர்கள்) கொல்லப்பட்டு இருகிறார்கள்.எந்த விசாரணையும் இன்றி...
தேச தீவிரவாதிக்கு பிரியாணி -100 கோடி செலவு.
இந்திய வங்கி கொள்ளையனுக்கு (சந்தேகம் மட்டுமே) என்கவுண்டரா?.....
தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதில் மூன்று இளைஞர்களை உயிரோடு கொளுதப்பட்டர்களே,அதற்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது?...
இந்த கொள்ளையர்களின் குற்றம் நிரூபிக்கபட்டால் அவர்கள் தண்டிக்கப்படலாம்,ஆனால் கொல்லபடவேன்டியவர்கள் அல்ல.
மக்கள் பணம் 25 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கபட்டுள்ளன.அவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கபடவில்லையே?...இதுதான் ஜனநாயகமா?...
இந்த ரத்தக்கறையின் மேல் சிலரது பதவி நாற்காலிகள் தக்க வைக்கப்பட்டுள்ளன.
நம் சமுதாயத்தின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளே, இது போன்ற கொள்ளைகளுக்கு (கொள்கையில்லா(கொள்ளை) அரசியல்) காரணம்...அதை களைய நாம் முன்வர வேண்டும்.இது தான் சரியான தருணம்..நம்மை சுய பரீட்சை செய்ய...

- அருணை வினோத்
No comments:
Post a Comment