Wednesday, 21 March 2012

யார் ஏழைகள்?...



ஒரு நாளைக்கு ரூ22.42 செலவிடுவோரும் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ28.65 செலவிடுவோரும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு.

கிராமங்களில் ஒரு மாதத்துக்கு ரூ672.8 செலவிடும் சக்தி படைத்தோர்களும், நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு ரூ859.6 செலவிடும் சக்தி படைத்தோர்களும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்ட குழு.


அப்படி ஒரு அளவுகோல் நிர்னைக்கபட்டால் இந்தியாவில் ஏழைகளே இல்லை என்பேன்..ஏனென்றால் 22.42  ரூபாய் கூட சம்பாதித்து செலவு செய்ய முடியாதவன் இந்த தேசத்தில் வாழவே முடியாது என்பேன்..

ரூ22.42 வைத்து கொண்டு இந்த தேசத்தில் ஒரு வேளை உணவை கூட உண்ணமுடியாத நிலையில்,  ரூ22.42 ஒரு நாளைக்கு செலவு செய்தால் அவர்கள் ஏழைகள் இல்லையாம்..எதை வைத்து இந்த அளவுகோல் நிர்னைக்கபடுகிறது?... இந்த அளவுகோலை நிர்னைத்தவர்களுக்கு தெரியாதா 22.42  ரூபாயை வைத்து கொண்டு ஒரு வேளை சாப்பிடமுடியாது என்று?...
  
எந்த அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது என்பது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும்,அதற்கு ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அடைந்த தோல்வியே சாட்சி.

காங்கிரஸ் நடத்தும் இந்த பொற்கால ஆட்சியில் அந்த அளவுக்கு வறுமை குறைந்துவிட்டதா என்ன?...

கிராம புறங்களில் வறுமை குறைந்துவிட்டது என்று சொல்கிறது திட்ட குழு, 2010  ஆம் ஆண்டில் 15,964   விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள்?...

என்னை பொறுத்தவரை இந்தியாவில் பிச்சை எடுப்பவன் கூட ஒரு நாளைக்கு சராசரியாக ரூபாய் 100 க்கு மேல் சம்பாதிக்க முடியும்,அப்படி சம்பாதித்தால் மட்டுமே அவனால் மூன்று வேளை சாப்பிடமுடியும்.

இது போன்ற தவறான அளவுகோல்களை நிர்னைத்து வறுமையில் வாடும் மக்கள் இந்தியாவில் இல்லை என்ற மாயையை எற்படுத்தி ஏட்டில் வேண்டுமானால் இந்தியாவை வல்லரசாக்கலாம்,உண்மையில் இந்தியா வல்லரசு ஆகாது.

இது போன்று வறுமைகோட்டு அளவை நிர்னைப்பதன் மூலம்,வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும்,உதவிகளையும் குறைக்க இந்த அரசு முயல்கிறது.

வறுமையை ஒழிக்காமல் இந்தியா வல்லரசாகலாம் என்று கனவு கண்டால்,அது கனவாகவே போய்விடும்...

No comments:

Post a Comment