Friday, 9 March 2012

ஜெனீவா தீர்மானம்...







ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பு.


லட்சகணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்,லட்சகணக்கான மக்கள் காணாமல் போயினர்,பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்,கட்டுகடங்காத மனிதஉரிமை மீறல்கள் இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெற்றது என்பதை இந்த உலகம் அறியும்.இலங்கையில் நடந்தது ஒரு அப்பட்டமான இன படுகொலை.தட்டிகேட்க வேண்டிய இந்தியா ஆயதங்களை கொட்டிகொடுத்து வேடிக்கை பார்த்ததுதான் உலக தமிழர்களின் உச்சபட்ச ஏமாற்றம்.



அப்போதைய தமிழக ஆளுங்கட்சி பதவிக்காக டெல்லியில் பிச்சையெடுத்து கொண்டு இருந்தது,தமிழர் அமைப்புகளின் போராட்டங்களை நீர்த்து போக செய்தது அப்போதைய தமிழக ஆளுங்கட்சி.


ஒரு உயிர் பலிக்கு,லட்சகணக்கான மக்களை பலி வாங்கியதற்கு இந்தியா துணைபோனது தான் மன்னிக்கமுடியாத துரோகம்.இதை உலக தமிழர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்,எனவே ஜெனீவா தீர்மானத்தை இந்தியா எதிர்த்து மீண்டும் ஒரு துரோகத்தை உலக தமிழர்களுக்கு செய்யகூடாது.


நியாயப்படி பார்த்தால் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு,ஆனால் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது,இது இலங்கைக்கு எதிரான,தமிழருக்கான ஆதரவான தீர்மானம்,எனவே இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்,இல்லையென்றால் அது உலக தமிழருக்கு இந்தியா செய்யும் துரோகமாக அமையும்.

No comments:

Post a Comment