நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது,காங்கிரஸ் கட்சியின் வருங்காலம் என்று கருதப்படும் ராகுலின் தீவிர பிரச்சாரத்திற்கு பிறகும் உத்தரப் பிரதேசத்தில் வெறும் 38 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.சென்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் 6 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.ராகுல் காந்தியின் சொந்த தொகுதியில் 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சோனியா காந்தியின் தொகுதியில் ஒரு தொகுதியை கூட கைபற்றமுடியவில்லை...என்ன காரணம்...
கடுமையான விலைவாசி உயர்வு,,அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துவது, தாறுமாறான பணவீக்க உயர்வு, மக்கள் தேவைகளில் அலட்சியபோக்கு, போன்றவைகள் தான்.
நாங்கள் தேர்தல்களில் வென்றால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று சல்மான் குர்ஷித் தேர்தல் சமயத்தில் மட்டுமே பேசினார்,இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் யாரும் இதை பற்றி பேசவில்லை,ஆனால் இதுபோன்ற காங்கிரஸ் கட்சியின் நாடகங்களை உ.பி மக்கள் நம்ப தயாராக இல்லை.
அயல் நாடுகளில் பதுக்கிவைக்கபட்டுள்ள கருப்பு பணத்தை திரும்ப கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்காதது.மத்தியஅரசு ஒதுக்கிய நிதியில் செய்யப்பட்ட தேசிய மருத்துவ திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை தடுக்க முற்படாதது.(மாயவதியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்),ஊழல் செய்தவர் வேண்டுமானால் மாயவதியாக இருக்கலாம் ஆனால் அதை தடுக்க மத்திய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது,எனவே காங்கிரஸ் கட்சிக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.
2G ஊழல்,டெல்லி காமன்வெல்த் விளையாட்டு ஊழல்,கோவாவில் சுரங்க ஊழல்,இப்படி பல ஊழல்களில் காங்கிரஸ் கட்சியின் இமேஜ் தூள் தூளாக உடைந்துபோயவிட்டது.என்னதான் இவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என காட்டிகொண்டாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை.
காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்கு போராடிய கட்சியாக இருக்கலாம்,ஆனால் இப்போது அங்கு மக்களுக்காக போராடவும்,சேவை செய்யவும் யாரும் இல்லை என்பதே உண்மை.
ராகுல் காந்தி அவர்களே ஏழை மக்களின் வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடிப்பது,டீ குடிப்பது,சாப்பிடுவது மட்டும் போதாது,ஏழை மக்கள் வாழ்க்கைக்கு தேவையானவைகளை செய்து கொடுங்கள்.அப்போது தான் நீங்கள் ஒரு நல்ல தலைவராக முடியும்.
No comments:
Post a Comment