பணம்,அரசியல்
பலம் கொண்டவர்களால் மணல்,கனிம
வளங்கள்,தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் கடுமையாக
சுரண்டப்படுகின்றன.இந்த சுரண்டலுக்கு எதிரானவர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.அவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடுவது இல்லை.இதற்கு அரசாங்கம் துணை போவது தான்
வேதனையிலும் வேதனை.
வாணிபம் செய்ய வந்தவன் ஆட்சி செய்தான்,ஆட்சி செய்ய வந்தவன் வாணிபம் செய்கிறான்
இதுதான் இன்றைய நிலை.
அரசாங்கம் ஒன்றும் இலாப,நட்ட கணக்கு பார்க்க வியாபார நிறுவனம்
அல்ல,இலாப நோக்கமற்ற ஒரு சேவை அமைப்பு.பிறகு
ஏன் வியாபாரம் செய்கிறார்கள்?.யார்
நலனுக்காக மக்கள் நலனுக்காகவா இல்லை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நலனுக்காக?...
மக்களுக்காக சேவை செய்ய
தேர்ந்தெடுக்கபட்ட அரசாங்கம் சேவை செய்யாமல் வியாபாரம் செய்கிறது,சாராயம்(டாஸ்மாக்),மணல்,கனிம வளங்கள்,தண்ணீர்
போன்றவைகளை விற்கிறது.இதன் மூலம் பலன் பெறுகிறவர்கள் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் மட்டுமே,பாதிக்கபடுவது பொதுமக்கள் தான்.
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின்
அனைத்து ஆற்றுபடுகைகளிலும் கிட்டத்தட்ட என்பது சதவிகித மணல் சுரண்டப்பட்டுவிட்டது.தமிழ்நாட்டு
மணல் அண்டை மாநிலங்களுக்கும்,அயல்
நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.மணல் சுரண்டப்படுவதால் நீர் வளம் பாதிக்கபடுகிறது,பன்னாட்டு நிறுவனங்கள் ஆழ்துளை கிணறுகள்
மூலம் (அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி) தண்ணீர் உறிஞ்சுவதால் அந்த பகுதியில்
விவசாய மற்றும் குடிநீர் கிணறுகள் வற்றிபோய்விடுகின்றன.இதே நிலை தொடருமானால்
வறட்சி தான் ஏற்படும்,நாம்
குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது,அப்போது
இந்த அரசு என்ன செய்யும்?...
“நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்,ஆனால் அந்த நீரே இல்லாமல் ஒரு உலகை
படைக்க இந்த அரசு முயல்கிறது போலும்?...
பன்னாட்டு நிறுவனங்களுக்கு கனிமவள
சுரங்கங்கள் அமைக்க பழங்குடி வலுகட்டாயமாக வெளியேற்றபடுகிறார்கள்.உலக
தாராளமயமாக்கள் என்ற முறையில் நம் இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால்
சுரண்டப்படுகின்றன.சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்களோ அதை
தான் இப்போது இந்த அரசு பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் செய்கிறது.அப்போது ஒரு
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இப்போது பல பன்னாட்டு நிறுவனங்கள் அவ்வளவுதான்
வித்தியாசம்,இரண்டுக்கும் ஒரே பெயர் சுரண்டல்.
பேராண்மை திரைப்படத்தில் ஒரு வசனம்
வரும்,ஒரு பழங்குடி மனிதன் பேசுவது போல் “ஏன்டா எங்களை எல்லாம் ஊரை விட்டு காலி
பண்ணிட்டு வெள்ளகாரனுக்கு பிளாட் போட்டு விக்க போறிங்களா?”என்று அதைதான் இப்போது இந்த அரசு
உலகமயமாக்கள் என்ற பெயரில் செய்து வருகிறது.
மணல் கொள்ளை,தண்ணீர் திருட்டு,கனிமவள சுரண்டல் போன்றவை தடுத்து
நிறுத்தப்பட வேண்டும்.அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும்.மக்களுடன்
சேர்ந்த கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.அப்போது தான் இயற்கை வளங்கள்
பாதுகாக்கப்படும்.இல்லையென்றால் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சொந்த நாட்டிலேயே
மக்கள் அகதிகள் ஆக்கப்படுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
அருணை வினோத்.
No comments:
Post a Comment