Thursday, 29 March 2012

என்ன தான் நடக்கிறது இந்த தேசத்தில்?...

நேற்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட காரணம் தலைமை ராணுவத்தளபதி வீ.கே.சிங் எழுதிய கடிதம் பத்திரிக்கைகளில் வெளியானது தான்.இவரை ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.எந்தவித விசாரணையும் இன்றி நீக்க கோருவது ஒரு தவறான முன் உதாரணம் ஆகும்.

என்ன தான் நடக்கிறது இந்த தேசத்தில்?...சில மாதங்களுக்கு முன்பு தலைமை ராணுவத்தளபதியின் வயது பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையீட்டு தீர்த்து வைத்தது,பிறகு ராணுவ அமைச்சரின் தொலைபேசி ராணுவ தளபதியால் ஒட்டு கேட்க பட்டது என்று குற்றச்சாட்டு,பிறகு தலைமை ராணுவத்தளபதி வீ.கே.சிங் சில நாட்களுக்கு முன் இந்து பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் தனக்கு ஒருவர் 14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார்,அதுபற்றி பாதுகாப்பு அமைச்சருக்கு தெரியபடுத்தி விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்,இன்று மார்ச் 12 ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதம் பத்திரிக்கைகளில் வெளிவந்து மிகப்பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது,அதாவது இந்திய ராணுவத்தில் போதிய ஆயுதங்கள் இருப்பு இல்லை,போர் மூளும் பட்சத்தில் ஒரு நாளைக்கு கூட ஆயுதங்கள் போதாது என்பது தான்.

தொடர்ச்சியாக ராணுவ அமைச்சகத்துக்கும்,ராணுவ தளபதிக்கும் மோதல் நடைபெற்று கொண்டே இருக்கிறது,பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் கூட அரசியல் நுழைந்து விட்டது தான் வேதனை.இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆரோக்கியமானது அல்ல.
 .

ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கூடி ரூபாய்க்கு மேல் ராணுவத்துக்கு செலவு செய்யபடுகிறது,பிறகு எப்படி ஆயுத பற்றக்குறை இருக்க முடியும் என்பது என்னை போன்ற சாதாரண மக்களுக்கு ஏற்படும் கேள்வி,இந்த ஆண்டுக்கு கூட 1 லட்சத்து 97 ஆயிரம் கோடி ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.மொத்த ஒதுக்கீட்டில் 70 சதவீதம் ஆயுதம் வாங்க செலவிடப்படுகிறது.இங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.இந்த ஆயுத கொள்முதலில் தான் ஊழல் நடைபெறுகிறது என்பது என்னை போன்ற சாதாரண மக்களின் சந்தேகம்,அதை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது.ஏனென்றால் சுமார் 30 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உணவுக்கு திண்டாடும் இந்த தேசத்தில் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடி ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது.இவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டும் ஆயுத பற்றாக்குறை ஏற்படுகிறது என்றால் அந்த பணம் எல்லாம் என்ன ஆனது.ராணுவ கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை கிடையாது என்பது தான் காரணம். இதற்கு எந்த தணிக்கையும் கிடையாது.ஊழல் தான் இதற்கெல்லாம் காரணம்.நாட்டின் பாதுகாப்பில் கூட ஊழல் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. வெளிப்படையான ஆயத கொள்முதலே இதெற்கெல்லாம் தீர்வாக அமையும் .

தன் உழைப்பில் வரி கட்டும் ஒரு இந்திய குடிமகன் ராணுவ கணக்குகளில் கேள்வி கேட்க முடியாது.பிறகு இதை எல்லாம் யார் தான் கண்காணிப்பது,யார் தான் கேள்வி கேட்பது.

ராணுவதளபதியின் கூற்றுப்படி அவர் முதலில் ராணுவ அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்,நீண்ட காலமாக எந்த பதிலும் இல்லை,பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்,ஏன் இந்த கடிதம் பத்திரிக்கைகளில் வெளி வந்தது,எப்படி வந்தது?..இதை வெளிப்படுத்த வேண்டிய நோக்கம் என்ன?...இது நம் நாட்டின் பாதுகாப்பை கேள்விகுறி ஆக்கிவிடாதா?..இது ஆயுத வியாபாரிகளுக்கு நாட்டின் ஆயுத பற்றாகுறையை தெரியபடுத்தவா?..அல்லது நாம் பலவீனமாக உள்ளோம் என்று தெரியப்படுத்தவா?..வேறு எந்த நோக்கத்திற்காக வெளியானது?...

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் நாம் 70 சதவீத ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.இவ்வளவு மனித வளம் உள்ள இந்த நாட்டில் இது வெட்கக்கேடானது.ராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரிக்க DRDO என்ற அமைப்பு வேறு இருக்கிறது,அது என்ன தான் செய்து கொண்டு இருக்கிறதோ?...கடவுளுக்கு தான் வெளிச்சம்.

ஒரு கடிதத்தை கூட இவர்களால் ரகசியமாக பாதுகாக்க முடியவில்லை என்றால் இவர்கள் எப்படித்தான் ராணுவ ரகசியங்களை பாதுகாக்க போகிறார்களோ?...

நம் அண்டை நாடுகளுடன் (சீனா,பாகிஸ்தான்) நமக்கு எப்போதும் பிரச்சனை தான்,இந்த வேளையில் ஆயுத பற்றாக்குறை வேறு...எங்குதான் போய்கொண்டு இருக்கிறது நாட்டின் பாதுகாப்பு?...நாம் எப்போதும் ஒரு பதட்டமான போர் சூழலில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எனபதை இந்த ஆட்சியாளர்கள் மறந்து விடக்கூடாது.

2 ஜி ஊழல்,நிலக்கரி சுரங்க ஊழல்,ராணுவத்தில் ஊழல் என்று அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன...வரி மேல் வரி கட்டி சாமானியன் செத்து கொண்டு இருக்கிறான்,ஊழல் மேல் ஊழல் செய்து அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும் கொழுத்துகொண்டு இருகிறார்கள்....மற்ற எல்லா ஊழலையும் விட பாதுகாப்பு துறையின் ஊழல் தான் நாட்டின் பாதுகாப்பையே கேள்விகுறி ஆக்கி விட்டது என்பது    தான் வேதனையிலும் வேதனை...என்ன தான் நடக்கிறது இந்த தேசத்தில்....


அருனைவினோத்

No comments:

Post a Comment