Wednesday, 13 June 2012

சகிப்புத்தன்மை வேண்டும்....



இரவு பத்து மணி இருக்கும் சுமார் 30 பேர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் வெகு நேரமாகியும் பேருந்து வரவில்லை,ஒரு பேருந்து சுமார் 10.30 மணிக்கு வருகிறது,சிலர் முன்பக்கமும் சிலர் பின்பக்கமும் பேருந்தில் ஏறிக்கொள்கிறார்கள்,முன்பக்கம் உள்ள சிலர் பணம் கொடுத்து விட்டு பயணச்சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள்,சிலரால் வாங்க முடியவில்லை,அதில் ஒருவர் நீண்ட நேரம் பயணச்சீட்டு வாங்க முயற்சி செய்துவிட்டு,நடத்துனரை பயணச்சீட்டு கொடுக்க முன்னால் கூப்பிடுகிறார்ஆனால் அவர் பின்னால் கொடுத்து வாங்கிக்கொள்ள சொல்கிறார்,அதற்கு அந்த நபர் சுமார் பத்து பேர் இன்னும் பயணசீட்டு வாங்க வேண்டி இருக்கிறது எங்களால் பின்னால் கொடுத்து வாங்க முடியவில்லை ஆகவே நீங்களே வந்து பயணச்சீட்டு கொடுக்கவும் என்கிறார்,அவரும் புலம்பிக்கொண்டே வந்து சுமார் எட்டு பேருக்கு பயணச்சீட்டு கொடுத்து விட்டு செல்கிறார்.



பிறகு அந்த பேருந்தில் பணி முடித்து விட்டு திரும்பும் இரண்டு மாநகர பேருந்து பணியாளர்கள் அந்த நபரிடம் நீங்கள் எப்படி அவரை முன்னால் கூப்பிடலாம்,நீங்கள் ஏன் முன்னால் ஏறிணீர்கள்,பின்னால் ஏற வேண்டியது தானே,நீங்கள் தான் பணம் கொடுத்து விட்டு பயணச்சீட்டு வாங்கவேண்டும் என்று அவரிடம் சண்டை போட்டார்கள்,அந்த நபரும் அதற்கு தானே உங்களுக்கு சம்பளம் தரப்படுகிறது,அது தானே உங்கள் வேலை என்று சொன்னார்.பிறகு அவருக்கான பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கி சென்றுவிட்டார்.இதை எல்லா பயணிகளும் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.

ஒரு அரசாங்க பணியாளரை அவர் வேலையை பார்க்க சொல்வது குற்றமா என்பது தெரியவில்லை.அந்த நடத்துனர் முன்னால் வந்து பயணச்சீட்டு வாங்காமல் போனால்,சிலர் பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்தால் இந்த அரசுக்கு தான் நஷ்டம்,அந்த பணத்தில் இருந்து தான் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை அவர் மறந்து விட்டார்,அவர் வேலையை செய்வதற்கு கூட அவருக்கு கடினமாக இருக்கிறது.

அரசாங்க பணியாளர்கள் என்பவர்கள் தெய்வம் போன்றவர்கள் அவர்கள் எதை சொன்னாலும் நம் மக்கள் கேட்டுகொள்கிறார்கள்,அவர்கள் நம் வரி பணத்தில் இருந்து தான் சம்பளம் பெறுகிறார்கள் என்பதை நம் மக்களும் மறந்து விடுகிறார்கள்.எதையும் எதிர்த்து கேட்பது இல்லை,கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.

எல்லாவற்றையும் சகித்து கொள்ள நம் மக்கள் பழகிவிட்டார்கள்,யாரும் எதையும் கேட்பது இல்லை,அந்த சகிப்பு தன்மை பயணச்சீட்டு கேட்ட நபருக்கு இல்லை...எல்லாவற்றையும் சகித்து கொள்ள இந்த சமூகம் நம்மை பழக்கிவிட்டது...எதையும் நாம் கேட்ககூடாது....நமக்கென்ன....

இந்த நாடும் நட்டு மக்களும் .................போகட்டும்.

1 comment: