Saturday, 5 May 2012

ஜாதிகள் உள்ளதடி பாப்பா-சே.சுப்பிரமணியன்


ஆயிரம் உண்டிங்கு  ஜாதி

தமிழ் நாட்டில் சென்ற வாரம் முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது
இங்கே விளம்பரங்கள் ஒரு சாம்பிள் தான்.




உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த link  கிளிக் செய்யவும்


தமிழ்நாட்டில் எத்தனை ஜாதிகள் உள்ளது என்று தெரியும்

ஜாதிகள் உள்ளதடி பாப்பா
வாக்கு வங்கியும் அதனால் இயங்குகிறது பாப்பா
இடஒதுக்கீடு உள்ளதடி பாப்பா
ஆனால் அது தேவையான மக்களுக்கு
(எல்லாம்) கிடைக்கலையே பாப்பா

எல்லா ஜாதியும் இட ஒதுக்கீடு கேட்பார் பாப்பா
அதில் உள் ஒதுக்கீடும் வரும் பாப்பா

கடைசியில் இது குரங்கு பிரித்த ஆப்பம் தான் பாப்பா
நம் நிலைமை இன்னும் மாறலயே பாப்பா

சே.சுப்பிரமணியன்

4 comments:

  1. ஜாதிகள் உள்ளதடி பாப்பா// கண்டிப்பா...நாடும் திருந்தாது..நம் மக்களும் திருந்த மாட்டார்கள்

    ReplyDelete
  2. அருமை சகோ,

    இப்படி வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்,சிறிய தொழில் முனைவோர் ஊக்குவிப்பு ,விவசாயத்தை இலாபகர்மான தொழிலாக்குதல் போன்றவற்றை அதிகப்படுத்தாமல் என்னமோ அனைவருக்கும் இப்படி பிரித்து கொடுத்தால் அரசு வேலை கிடைப்பது போன்ற மாயையை ஏற்படுத்தி மக்களிடையே பிரிவினை மட்டுமே வளர்க்கும் செயல்.
    ‍‍‍‍
    இன்னும் நிறைய சுவரொட்டிகள் உங்கள் கண்ணில் படவில்லை என நினைக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  3. சாதியை நிச்சயமாக ஒழிக்க முடியும்.. கீழ்கண்டவற்றை நம்மால் செய்ய முடிந்தால்..
    1) பிறப்பின் அடிப்படையில் சாதியை தீர்மானிக்காமல் தொழில் அடிபடையில் தீர்மானித்தால்.. உதரணமாக பொறியியல் சார்ந்த அனைவரும் ஆசாரி.. காவல், படையில் வேலை செய்யும் அனைவரும் சத்திரியர், தொழில் முனைவோர் அனைவரும் வைசியர்..அர்ச்சகர் படிப்பு முடித்து தகுதி பெற்ற அனைவரும் பிராமணர்..
    2 ) படித்த சாதி மறுக்கும்/மறைக்க/பதிவு செய்ய விரும்பாத நாம் அனைவரும் திருமணங்கள் செய்யும் போது பிறப்பின் அடிப்படையிலான வேறு சாதியுடன் மட்டுமே செய்ய உறுதி எடுத்தால்..
    3) மேல் சாதி, உயர் சாதி மக்கள் குறிப்பாக பட்டியல் (reservation) சாதிகள் எனப்படும் SC /ST சாதி மக்களை நிறைய திருமணம் செய்ய வேண்டும்.அதுவும் குறிப்பாக யார் யார் எல்லாம் இட ஒதுக்கீடு மூலமாக பாதிக்கபடுவதாக நினைக்கிறார்களோ அவர்களோ அல்லது அவர்கள் பிள்ளைகளோ செய்வதாக உறுதி பூண்டால்..
    4) இட ஒதுக்கீடு மூலமாக நிறைய லாபம் அடைந்து சமூகத்தின் முன்னேறிய அடையாளமாக திகழும் SC /ST /BC /MBC /DC மக்கள் பெரிய மனது பண்ணி மற்ற சாதி மக்களை தங்களுக்குள் உறவு முறையில் (மண முறையில்) சேர்த்து கொள்ள முன் வந்தால்..

    ReplyDelete