Wednesday, 23 May 2012

அரசியல் பாலபாடம் -1

அம்மா தாயே மன்னிச்சிக்கோமா
அய்யா தலைவா மன்னிச்சிடுங்க


இதுதான் அரசியல் பாலபாடம் விதி எண் -1


அரசியலில் இந்த வார்த்தையை மறக்காமல் வைத்திருக்க வேண்டும் எப்போது வேண்டுமானாலும் அது பயன்படும்,எப்போது என்று கடவுளுக்கு கூட தெரியாது.


1999 இல் பி.எ.சாங்கமா சோனியா காந்தி இத்தாலி நாட்டவர் என்று எதிர்த்தார்.






காங்கிரஸில் அடுத்த பிரதமராக சோனியா காந்தி வர கூடாது என்பது தான் இவர் எண்ணம்.இவருடன் சேர்ந்து சரத்பவார்,தாரிக்அன்வர்,ஆகியோரும் சோனியாவை எதிர்த்தனர்,அதனால் காங்கிரஸ் அவர்களை கட்சிலிருந்து நீக்கியது.


காங்கிரஸ் என்பது (திமுக போல) வாரிசுகளுக்கு மட்டும் தான் என்று புரிந்து கொண்டு மம்தா,சாங்கமா,சரத்பவார் ஆகியோர் தனித்தனியாக கட்சி ஆரம்பித்தனர்.



கூட்டணி ஆட்சி என்பது இந்தியாவில் காலத்தின் கட்டாயம்.இப்போது இவர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறார்கள்.


இவருடைய மகள் அகதா சங்கமா எம்.பி. 29 வயதில் மந்திரி ஆனவர்.
பல வருடங்களுக்கு முன்பு நடந்ததற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறார்.


அடுத்த ஜனாதிபதியாக ஆக இப்போதே ஜெயலலிதா இவருக்கு ஆதரவு தெரிவித்து விட்டார்.



ஒரு வேளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014 இல் தோல்வி அடைந்தால் மற்ற கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஜெயலலிதா பிரதமர் ஆக பி.எ. சாங்கமா நிச்சயம் (மறைமுகமாக) ஆதரவு தருவார்.



2014 இல் காங்கிரஸ் வெற்றி அடைந்தால் ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது.அப்போது ராகுல்காந்தி (சு.சாமி சொல்வது போல்) கொலம்பிய பெண்ணை திருமணம் செய்தவர் என்று எதிர்க்க இவர் (மறைமுகமாக) ஆதரவு தரலாம்.




கவுண்டமணி சொல்வது போல்
அரசியலில் இது எல்லாம் சகஜம் அப்பா............. அப்பப்பா

No comments:

Post a Comment