Wednesday, 23 May 2012

இந்திய மக்களுக்கு பாரத பிரதமரின் கடிதம்...


அன்புள்ள பாரத மக்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறோம் அதற்கு பரிசாக பெட்ரோல் விலையை 7.98 ரூபாயாக உயர்த்தி இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி இந்திய மக்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்தோம். (2009-Rs.44.44/- Now 2012-Rs.77.53/-)


ஆகவே மக்கள் அனைவரும் இந்த விலை உயர்வையும் மனப்பூர்வமாக ஏற்றுகொண்டு இந்த அரசு மேலும் மேலும் விலைவாசியை ஏற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

ஏனென்றால் எங்களுக்கு விலைவாசியை ஏற்றுவதை தவிர வேறு வழி தெரியாது,அதுதான் எங்களின் புதிய பொருளாதார கொள்கை,பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வசூலிக்கபடாத 5000 கோடி வரிகளை எங்களால் பெரிய தொழிலதிபர்களிடம் வசூலிக்க முடியாது (5000 கோடி வசூலிக்கபடாத வரிகள்),எங்களால் யாரிடம் பிடுங்க முடியும் உங்களிடம் தானே?...உங்களை தவிர எங்களுக்கு வேறு வழி என்ன இருக்க முடியும்.

எங்களுக்கு ஓட்டு போட்ட உங்களிடம் பிடுங்காமல் எங்களுக்கு நிதி உதவி செய்யும் தொழிலதிபர்களிடமா செய்ய முடியும்...

என்றும் உங்களின் மேலான ஆதரவை நாடும்...

மன்மோகன்சிங்
இந்திய பிரதமர்
புதுடில்லி

No comments:

Post a Comment