Saturday, 26 May 2012

எது அவசியம் மக்களுக்கு?...


புதிய செய்தி


IPL போட்டிக்காக M.A.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிய கேலரிகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது.


இதே ஸ்டேடியத்தில் 2011இல் உலககோப்பை போட்டிக்காக புதிய கேலரிகள் 110 நாட்களுக்குள் அசுர வேகத்தில் கட்டிமுடிக்கப்பட்டன.





பழைய செய்தி-1


இந்தியாவில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள்,சேமிப்பு கிடங்கு வசதி இல்லாமல் வீணாகின்றன.


பழைய செய்தி-2


சென்னை பல்லாவரத்தில் ஒரு ரயில்வே மேம்பாலம் கட்ட 2001இல் திட்டம் தீட்டப்பட்டு 2003இல் மேம்பால பணிகள் துவங்கப்பட்டு 2003இல் இருந்து மேம்பாலத்தை கட்டுகிறார்கள்,கட்டுகிறார்கள்,கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.


ஒவ்வொரு முறையும் ஒரு அமைச்சர் வந்து பார்வையிடுவார் பிறகு இந்த ஆண்டுக்குள் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் என்பார்.மக்களும் மண்டையை ஆடிக்கொண்டு கையை தட்டிவிட்டு போய் விடுவார்கள்.


2010 ஏப்ரலில் ஒருவர் இந்த கட்டி முடிக்கபடாத ரயில்வே மேம்பாலத்தில் கார் ஒட்டிக்கொண்டு போய், அந்த கார் பயங்கரமாக விபத்துக்குள்ளானது.


இன்றும் பல்லாவரம் ரயில்வே மேம்பாலம் அதே முடிக்கப்படாத நிலையில் தான் உள்ளது.


60% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் இந்த நாட்டில் கிரிக்கெட் அவசியமா?மக்கள் நலன் அவசியமா?...


110 நாட்களுக்குள் அசுர வேகத்தில் புதிய கேலரிகள் கட்டிமுடிக்கப்படும்போது, உணவு தானியங்களை சேமிக்க தானிய கிடங்குகளை இந்த அரசால் அசுர வேகத்தில் கட்டமுடியாதா?.....இப்படி பல்லாவரம் மேம்பாலத்தை கட்டிமுடிக்க முடியாதா?.....


இந்த நாட்டில் மக்கள் நலத்திட்டங்களை விட கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.இப்போது சொல்லுங்கள்


நிச்சயம் கிரிக்கெட் தான் முக்கியம்,கிரிக்கெட் இல்லாவிட்டால் மக்கள் உயிர் வாழ்வது கடினமாகிவிடும்.


இருக்காதா பின்ன கிரிக்கெட்,சினிமா,மெகா சீரியல்,டாஸ்மாக் போன்றவைகள் இல்லாவிட்டால் மக்கள் தங்கள் பிரச்சனைகளை பற்றி சிந்தித்து அதற்காக போராட ஆரம்பித்து விடுவார்கள்.


மக்கள் தங்கள் பிரச்சனைகளைப் பற்றி உணராமலும்,விழித்துக் கொள்ளாமலும் இருக்க கிரிக்கெட்,சினிமா,கொலைவெறி டி பாடல்,மெகா சீரியல்,டாஸ்மாக் என பல அபீன்கள் உள்ளன.


போதை தெளிந்து விட்டால் மூளை வேலை செய்ய ஆரம்பித்து விடும்...


மதம் ஒரு அபீன் என்றார் காரல் மார்க்ஸ்...


மதம் மட்டும் தானா?.........

No comments:

Post a Comment