பத்திரிகையாளர்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்,அப்போது தான் அவர்கள் தரும் செய்தியும் நடுநிலையோடு இருக்கும்.ஆனால் ஒரு பிரபல பத்திரிகையில் பணிபுரியும் இவர் எப்படி தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளர் ஆனார் என்பது தான் தெரியவில்லை,அதுவும் ராசா திகாரில் இருந்து வெளியில் வரும் போது ''பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!''என்று பேனர் வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்.
பொது ஊடக துறையில் பணிபுரியும் இப்படி தி.மு.க க்கு பேனர் வைக்கும் அளவுக்கு சென்று இருக்க கூடாது.
இதுவரை நல்ல பத்திரிகையாளராக தெரிந்த அவர் இந்த செய்தியை படித்தது முதல் முதல் தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளராக தெரிய ஆரம்பித்தார்.இவர் நிறையமுறை தி.மு.க வை ஆதரித்து எழுதி இருக்கிறார் அப்பொழுதெல்லாம் எனக்கு அவர் தி.மு.க அனுதாபியாகவே தெரிந்தார்.
இனிமேல் அந்த பிரபல பத்திரிகையில் பணிபுரிவதை விட்டுவிட்டு முரசொலியில் சேர்ந்து,தி.மு.க வின் கொள்கைகளை பரப்பலாம்,இப்போது தி.மு.க தொண்டர்களுக்கே கொள்கை என்னவென்று தெரியவில்லை,இவருக்கு நிறைய தெரியும் என்பதால் இதை செய்யலாம்.இவர் ஒரு நல்ல பத்திரிகையாளர் என்கிற நிலையை இழந்து விட்டார்.
தி.மு.க க்கு ஒரு புதிய கொள்கைபரப்பு செயலாளர் கிடைத்து விட்டார்....
பேசாமல் தி.மு.க வில் சேர்ந்து விட்டால் சில வருடங்களில் இவரும் அமைச்சராகி விடுவார்,பின்னாளில் இவருக்கும் யாராவது இப்படி பாராட்டி பேனர் வைப்பார்கள்...
திரு.வினோத் அண்ணன், நீங்கள் வலையுலகிற்குப் புதியவர் என்று நினைக்கிறேன்! அவர் திமுகவின் புதிய கொள்கைப் பரப்புச் செயலாளர் அல்ல. மிகப் பழைய கொள்கைப் பரப்புச் செயலாளர். "லக்கிலுக்" யுவா அவர்கள் 2005 இல் இருந்து வலைப்பதிகிறார். அன்றில் இருந்து வெளிப்படையான திமுக ஆதரவாளராகவே இருக்கிறார். எழுதுகிறார். அவர் வலைப்பதிய வந்த காலத்தில் பத்திரிக்கைத் துறையில் இல்லை. விளம்பரத்துறையில் இருந்தார். வலையில் அவரது எழுதும் திறன் பார்த்து பத்திரிக்கையில் அவரை அழைத்தனர். அவர் திமுகாவிற்காக எழுதுபவர் என்று அறிந்தேதான் அழைத்து வேலையில் சேர்த்தனர். பத்திரிக்கையிலும் அவர் அரசியல் சார்ந்த எந்தக் கட்டுரையும் எழுதுவதில்லை. அதனால் அவரது அரசியல் நிலைப்பாடுப்பாடு பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையுமில்லை. நன்றி.
ReplyDeleteதிரு.புதுகை அப்துல்லா அண்ணன் அவர்களுக்கு,நான் வலையுலகிற்குப் புதியவன் அல்ல கடந்த நான்கு ஆண்டுகளாக வலைப்பதிவை படித்து வருகிறேன்,எழுத ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகின்றன,நான் அவர் வலைப்பதிவை மிக தீவிரமாக படித்து வருகிறேன்,அப்போதெல்லாம் அவர் தி.மு.க அனுதபியாகவே தெரிந்தார்.ஆனால் அவர் இப்படி ராசாவுக்கு வரவேற்ப்பு கொடுக்கும் அளவுக்கு சென்று இருக்க கூடாது என்பது தான் என் எண்ணம்.தி.மு.க என்ற சொந்த கட்சி கூட கொடுக்காத வரவேற்பை அண்ணன் யுவா கொடுத்து விட்டார் என்பது தான் என் ஆதங்கம்.
Deleteஆக ஓராண்டு காலத்துக்கு மேல் சிறையில் இருந்து, தனது உயிருக்கு கட்சி மேலிடத்தால் ஆபத்தில்லை என தனி ஆசுவாசம் பெற்று வெளியே வந்திருப்பவர்தான் சிறுத்தையமா? சிரிப்புத்தான் வருகுதையா.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
வெட்கம் கெட்ட அல்லக்கைகள்
ReplyDelete