சென்ற வாரம் வந்த பூகம்பத்தில் எனது நண்பரின் எட்டு வயது மகள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்,இரவு நேரங்களில் அந்த குழந்தை எழுந்து அம்மா பில்டிங் ஆடுகிறது,என்று கூறி தினமும் அழுகிறாள்,அவளுக்கு எப்பொழுதும் அதை பற்றியே ஒரு நினைப்பு.இதற்கு என்ன காரணம் டிவி சேனல்களில் காட்டப்பட்ட அபரிமிதமான பயமுறுத்தும் தகவல்களும்,சில சேனல்களில் இந்தோனேஷியாவில் அடித்த சுனாமி அலைகள் பற்றிய படங்களுமே, அதையெல்லாம் பார்த்த அந்த சிறிய குழந்தை பயந்து விட்டது,அவள் வீட்டிலும் எப்போது பார்த்தாலும் பூகம்பம் பற்றிய கேள்விகளையே அதிகம் கேட்டு கொண்டு இருக்கிறாள்,பயந்த முகத்துடனே எப்போதும் காணப்படுகிறாள்.மருத்துவரிடம் கூட்டிசென்றும் பலன் இல்லை.
இன்றைய குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே சொல்லி தரப்படுகிறது,பள்ளியை விட்டால் வீடு,வீட்டை விட்டால் பள்ளி,எப்பொழுதும் படிப்பு,படிப்பு என்ற ஒன்று மட்டுமே அவர்களின் முழுநேர வேலையாகிறது,பிறகு வீட்டிலும் கார்டூன் சேனல்களையே பார்த்து வளர்கின்றனர்,இதையெல்லாம் சொல்லித்தரும் பள்ளியும்,பெற்றோரும் தைரியத்தையும்,தன்னம்பிக்கையும் சொல்லி தருவதில்லை,அது அந்த நம்பிக்கையும்,தைரியமும் இருந்து இருந்தால் அந்த பெண் ஏன் எப்படி பயந்து அழுது கொண்டு இருக்க போகிறாள்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இலலையே
என்ற பாரதியின் வைரவரிகளை இப்போதுள்ள குழந்தைகளுக்கு சொல்லி தருகிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை,அப்படி தெரிந்து இருந்தால் இப்போதுள்ள குழந்தைகள் இப்படி எல்லா செயல்களுக்கும் பயந்து வாழமாட்டர்கள்.
இன்றைய குழந்தைகளுக்கு படிப்பை மட்டும் சொல்லிதராமல்,வாழ்க்கை வாழ்வதற்கான தன்னம்பிக்கையும்,தைரியத்தையும் சிறு வயது முதலே நாம் சொல்லித்தர வேண்டும்,அது தான் ஒரு நல்ல மனதைரியம் மிக்க, தன்னம்பிக்கை உள்ள குழந்தையை உருவாக்கும்.
அருனை வினோத்
No comments:
Post a Comment