சில தினங்களுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.கடந்த வாரம் சென்னை அண்ணா பல்கலைகழக மாணவர் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.கடந்த வருடத்தில் மட்டும் ஐ.ஐ.டி மாணவர்கள் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்னவாக இருக்கும்?...எவ்வவளோ கஷ்டப்பட்டு படித்து இவ்வளவு பெரிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் ஏன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.அவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு என்ன கஷ்டம் இருந்து இருக்கும்.
இன்றைய கல்வி அவர்களுக்கு கொடுக்கும் அழுத்தம் மற்றும் இந்த போட்டி உலகத்தில் முன்னேற அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயம்.தான் படிக்க நினைத்ததை என் மகன் படிக்க வேண்டும் என்கின்ற பெற்றோரின் அழுத்தம் போன்றவையே காரணம்.
சில மாணவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து,நல்ல மதிப்பெண் பெற்று பிறகு தொழில் மற்றும் மருத்துவ கல்வியில் சேர்ந்து,ஆங்கில வழியில் பயிலும் போது அவர்களால் சரிவர படிக்க முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு,அதனால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் அதிகம்.
இதெற்கெல்லாம் காரணம் நம் கல்வி முறையும்,அதிக மதிப்பெண் பெறும் மாணவன்தான் திறமையானவன் என்ற எண்ணமும் தான் காரணம்.அதிகமாக மதிப்பெண் பெறும் ஒருவன் அறிவாளியாக இருப்பான் என்று எண்ணும் நம் இந்திய வேலைவாய்ப்பு சந்தையும் ஒரு காரணம்.
இந்த உலகில் கல்வியில் முதலாக வந்த எல்லா மாணவர்களும் வாழ்வில் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்ல முடியாது.சுமாராக படித்த எத்தனையோ கோடி பேர் உயர்ந்த இடத்தை அடைந்து இருக்கிறார்கள்.
தாய் மொழியில் உயர் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்,அதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவாக உள்ளது.ஆனால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச,எழுத பயற்சி கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்த உலகமயமாக்கலில் ஆங்கிலம் இல்லாமல் வேலைவாய்ப்பு கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது,அதனால் வேறு வழி இல்லை.
இந்த கல்வி முறையிலேயே தவறு இருக்கிறது,அதைப்பற்றி நாம் விவாதிக்க ஆரம்பித்தால் எவ்வளோ பேச வேண்டியிருக்கும்.
பெற்றோர்களே பிள்ளைகளின் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீர்கள்,அவர்கள் மீது அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்காதீர்கள்.அது ஒன்று தான் நம்மால் செய்ய முடியும்.கல்விமுறையில் நம்மால் மாற்றம் கொண்டு வரமுடியுமா என்பது கேள்விக்குறியே?...
நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது,தோல்விகளில் இருந்து பாடம் கற்போம்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது...
அருனை வினோத்
பெற்றோர்களே பிள்ளைகளின் மீது உங்கள் கனவுகளை திணிக்காதீர்கள்,அவர்கள் மீது அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்காதீர்கள்.அது ஒன்று தான் நம்மால் செய்ய முடியும்.கல்விமுறையில் நம்மால் மாற்றம் கொண்டு வரமுடியுமா என்பது கேள்விக்குறியே?...
ReplyDeleteஅழகாக சொன்னீர்கள்.
நான் ஏன் வாழக்கூடாது?
ReplyDeleteஎன்ற தங்கள் இடுகையோடு தொடர்புடைய இடுகைக்குத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
http://gunathamizh.blogspot.in/2011/12/blog-post_2484.html
நன்றி...திரு.குணசீலன் அவர்களே
Deleteenakkum niraya nerangalil therkkolai seidhu kollalaama enru thonrugiradhu. adharkku pala kaaranangal irukkinradhu. mukkiyamaag en vayadhu 27 aaginradhu yaarum pen thara mun varavillai. nalla velayil than irukkin ren. aanalum pen veettaargal migavum alatchiya padutthugiraargal. idhanal en manam udaindhu tharkolai seidhu kollalaama enru thonrugiradhu.
ReplyDeleteஆழிய கருத்து நன்றி
ReplyDelete