நான் பார்த்த ஒரு ட்ரைலர் தான் இந்த படத்தை பார்க்க தூண்டியது.சந்தானம் ஒரு பிளாஸ்டிக் க்ளாஸில் ஒரு கட்டிங் ஊற்றுவார்,அதனுடன் கொஞ்சம் தண்ணீர் கலப்பார்,குடித்து விட்டு பிளாஸ்டிக் க்ளாஸை தூக்கி குப்பை தொட்டியில் எறிவார்,இதை வைத்து ஒரு வசனம் பேசுவார்,சரக்கு தான் கதாநாயகி மீரா அதில் கலக்கும் தண்ணீர் தான் கதாநாயகன் சரவணன் சரக்கை குடித்து விட்டு,சேர்ந்த நீங்க என் மனசுக்குள்ள இருக்குறீங்க,சேர்த்து வைத்த நான் குப்பைத்தொட்டியில்(பிளாஸ்டிக் கிளாஸ்),அதுதான் வாழ்க்கை என்ற வசனம் தான் படம் பார்க்க தூண்டியது.
இயக்குனர் வெற்றிமாறன் எப்படி நடிகர் தனுஷை தவிர்த்து ஒரு கதையை செய்ய முடியாதோ, அதை போல இயக்குனர் ராஜேஷ்க்கு, நடிகர் சந்தானத்தை தவிர்த்து ஒரு கதையை செய்ய முடியாது.அவருடைய எல்லா படங்களும் ஒரே சாயலில் தான் இருக்கின்றன.கதையே இல்லாமல் சந்தானத்தை நம்பி மட்டுமே படம் எடுக்கிறார்,அந்த தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும்.
முழு நீள காமெடி,போரடிக்காத திரைக்கதை,மனதில் நிற்க கூடிய பாடல்கள் என்பது படத்தின் பலம்.கதாநாயகன் சரவணனுக்கு கொரியரில் அவரது காதலியின் திருமண அழைப்பிதழ் வருகிறது,பாண்டிசேரியில் நடைபெறும் கல்யாணத்தை தடுத்து நிறுத்த சரவணனும் அவரது நண்பன் பார்த்தாவும் செல்கிறார்கள்,இடையில் ப்ளாஷ்பேக் சரவணன் எப்படி மீராவை காதலிக்கிறார்,சரவணனுக்கும் நண்பன் பார்த்தாவுக்கும் இடையில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்,கடைசியில் எப்படி கல்யாணத்தை நிறுத்தி மீராவை கைப்பிடிக்கிறார் என்பது தான் படம்,மீதியை வெள்ளி திரையில் பாருங்கள்.
நடிகர்கள் – உதயநிதி ஸ்டாலின்,சந்தானம்,அழகம் பெருமாள்,சாயாஜி ஷிண்டே
நடிகைகள் – ஹன்சிகா,சரண்யா பொன்வண்ணன்,உமா பத்மநாபன்.
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு-பாலசுப்ரமணியம்
எடிட்டிங் – விவேக் ஹர்ஷன்
எழுத்து,இயக்கம் – ராஜேஷ்
தயாரிப்பாளர் – உதயநிதி ஸ்டாலின்
No comments:
Post a Comment