Wednesday, 5 December 2012

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு


உதாரணம்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்பான விற்பனை நிறுவனங்களான பெப்சி மற்றும் கோகோ-கோலா போன்றவற்றை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் போது இந்த நிறுவனங்களால் இந்திய சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது என்று சொல்லப்பட்டது,ஆனால் இன்றைய நிலைமையே வேறு எந்த ஒரு சிறு கிராமத்திலும் கோலி சோடா,கலர் சோடா கிடைப்பதே இல்லை,ஒரு கிராமத்திற்கு ஒரு கோலி சோடா வியாபாரியின் வாழ்க்கை இந்த அந்நிய முதலீட்டால் பாழாய் போனது தான் மிச்சம்.


ஏனென்றால் இந்த பெரிய வியாபார நிறுவங்களுடன் (பண முதலைகளுடன்) நம்முடைய சிறு வியாபாரிகள் போட்டி போட முடியவில்லை விளைவு பல சிறு கோலி சோடா வியாபாரிகள் தொழிலை விட்டு விட்டனர்.வரும்போது ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்த பெப்சி,கோகோ-கோலா இன்று பதினைந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது,அவர்கள் சொல்வது தான் விலை,இதே நிலை தான் சில்லறை வணிகத்திலும் நடக்கப்போகிறது.

சந்தேகம்

அமைச்சர் கபில்சிபல் சொல்கிறார் ஆண்டுக்கு சுமார் எட்டு இலட்சம் டன் காய்கறிகள் குளிர் பதன வசதி இல்லாமல் வீணாகின்றன.இந்த அந்நிய முதலீட்டால் அது தடுக்கப்படும் என்கிறார்.ஒரு அரசாங்கம் அதனுடைய மக்களுக்கு இந்த வசதி வாய்ப்புகளை செய்து தரவேண்டும்,ஆனால் நாங்கள் செய்ய மாட்டோம்,ஒரு பன்னாட்டு நிறுவனம் தான் இந்த குளிர் பதன வசதியை செய்து கொடுக்கும் என்று சொல்வதற்கு இந்த அரசாங்கம் எதற்கு?அதற்காகவா நாங்கள் ஓட்டு போட்டு உங்களை ஆட்சி அதிகாரத்தில் உட்காரவைத்தோம்?இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை?...

புலம்பல்

நம்முடைய பொருளாதாரத்தை நாம் தான் கட்டமைக்க வேண்டும்.அப்போது தான் அது  இஸ்திரமாக இருக்கும்,அதை வேறொருவரிடம் விட்டு விட்டாள் நாம் அவரை சார்ந்து தான் இருக்கவேண்டும்.அது நாட்டுக்கே ஆபத்து.

எல்லாவற்றிலும் அந்நிய முதலீடு என்பது நாட்டை படுகுழியில் புதைப்பதற்கு சமம்.பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை காங்கிரஸ் படுகுழியில் புதைக்கிறது.கடவுளே இந்த தேசத்தை காப்பாற்று....உன்னால் முடிந்தால்?...

அருணை வினோத்.

No comments:

Post a Comment