நேற்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட காரணம் தலைமை ராணுவத்தளபதி வீ.கே.சிங் எழுதிய கடிதம் பத்திரிக்கைகளில் வெளியானது தான்.இவரை ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.எந்தவித விசாரணையும் இன்றி நீக்க கோருவது ஒரு தவறான முன் உதாரணம் ஆகும்.
எல்லா நெடும்பயணங்களும் ஒரே ஓர் அடியில்தான் ஆரம்பமாகின்றன...தாவோ ஞானி லாவோல்ட்-சு.
Thursday, 29 March 2012
Wednesday, 28 March 2012
Monday, 26 March 2012
அரசின் முகத்தில் கரி!
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாத நிலைமையில், இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கிளம்பியிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொன்ன அதே தலைமை தணிக்கைக் குழுதான் இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10.67 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
Sunday, 25 March 2012
கல்வி வியாபாரம்...
என்னுடைய நண்பர் தன்னுடைய மகனுக்கு 3 ஆம் வகுப்பு சேர்க்க கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி தேடிக்கொண்டு இருக்கிறார். 3 ஆம் வகுப்பு சேர்க்க M.P மற்றும் M.L.A பரிந்துரைகள் வேறு.அதுவும் கட்டணம் ஆண்டுக்கு 65000/- ரூபாய்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பள்ளியில் சொன்னார்களாம் இந்த வருட சேர்க்கைக்கு இப்போது வந்து விண்ணப்பம் கேட்டால் என்ன செய்வது,நாங்கள் போன வருடமே முடித்து விட்டோம் என்று?...
Friday, 23 March 2012
Wednesday, 21 March 2012
யார் ஏழைகள்?...
ஒரு நாளைக்கு ரூ22.42 செலவிடுவோரும் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ28.65 செலவிடுவோரும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு.
கிராமங்களில் ஒரு மாதத்துக்கு ரூ672.8 செலவிடும் சக்தி படைத்தோர்களும், நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு ரூ859.6 செலவிடும் சக்தி படைத்தோர்களும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்ட குழு.
Tuesday, 20 March 2012
ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்-பிரதமர்.
பிரதமர் கூறிய செய்தி
இலங்கைத் தீர்மானம் ஜெனீவாவில் கொண்டு
வரப்பட உள்ளது. இத்தீர்மானத்தின் வாசகங்கள் என்ன என்பதே இன்னும்
தெரியவில்லை. மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றன. இந்த தீர்மானத்தை ஆதரித்து
இந்தியா ஓட்டு போடுவதற்கு வாய்ப்புள்ளது.
அய்யா நீங்கதான் இந்தியாவுக்கு
பிரதமர்னு சொல்லறாங்க உண்மையா?...சந்தேகமா இருந்தா சோனியாகாந்தி அம்மாகிட்ட கேட்டு
சொல்லுங்க?...
Friday, 16 March 2012
அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன் - கருணாநிதி (ஆ)வேசம்
செய்தி
இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு,
போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன்,
உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா
அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி
தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.
ஐயா, சரியா கேட்கல! டீ குடிக்க போறிங்களா? இல்ல தீ குளிக்கப்போறிங்களா? (ஏன்னா, வரலாறு ரொம்ப முக்கியம் தலைவரே!)
Thursday, 15 March 2012
ஜெனிவா தீர்மானமும்,இந்திய(தமிழக)அரசியலும்...
சில மாதங்களுக்கு முன்னால் இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே இப்படி சொன்னார் "இந்த போரை நாங்கள் இந்தியாவின் சார்பாக வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறோம்" என்றார்.இதற்கு இந்திய அரசு இதுவரை அந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள்,அதைத்தான் இந்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது.
Tuesday, 13 March 2012
இயற்கை வளச் சுரண்டல்கள்
பணம்,அரசியல்
பலம் கொண்டவர்களால் மணல்,கனிம
வளங்கள்,தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் கடுமையாக
சுரண்டப்படுகின்றன.இந்த சுரண்டலுக்கு எதிரானவர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.அவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடுவது இல்லை.இதற்கு அரசாங்கம் துணை போவது தான்
வேதனையிலும் வேதனை.
வாணிபம் செய்ய வந்தவன் ஆட்சி செய்தான்,ஆட்சி செய்ய வந்தவன் வாணிபம் செய்கிறான்
இதுதான் இன்றைய நிலை.
Monday, 12 March 2012
திரும்பிப்பார்க்கிறேன்-என்னுடைய சைக்கிள்
நாங்கள் எங்கள் ஊரில் டீ கடை வைத்து இருந்தோம்,அந்த கடைக்கு டீ குடிக்க வருபவர்களின் சைக்கிளை வாங்கிக்கொண்டு,சைக்கிள் ஓட்ட(அரை பெடல்)கற்றுக்கொண்டேன்.ஒரு நாள் சைக்கிளில் வளைவில் எதிர்பாராதவிதமாக பேருந்தில் மோதி,என் கால் முட்டி உடைந்து ஒரு மாதம் நடக்க முடியாமல் அவதிப்பட்டேன்.இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் என் அம்மாவிடம் உங்க மகன் பிழைத்தே பெரிய விஷயம் என்றார்,அதிலிருந்து கொஞ்ச நாட்கள் சைக்கிள் ஓட்டாமல் இருந்தேன்.
Friday, 9 March 2012
ஜெனீவா தீர்மானம்...
ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பு.
லட்சகணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்,லட்சகணக்கான மக்கள் காணாமல் போயினர்,பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்,கட்டுகடங்காத மனிதஉரிமை மீறல்கள் இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெற்றது என்பதை இந்த உலகம் அறியும்.இலங்கையில் நடந்தது ஒரு அப்பட்டமான இன படுகொலை.தட்டிகேட்க வேண்டிய இந்தியா ஆயதங்களை கொட்டிகொடுத்து வேடிக்கை பார்த்ததுதான் உலக தமிழர்களின் உச்சபட்ச ஏமாற்றம்.
Thursday, 8 March 2012
ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது ஏன்?...
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது,காங்கிரஸ் கட்சியின் வருங்காலம் என்று கருதப்படும் ராகுலின் தீவிர பிரச்சாரத்திற்கு பிறகும் உத்தரப் பிரதேசத்தில் வெறும் 38 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.சென்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் 6 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.ராகுல் காந்தியின் சொந்த தொகுதியில் 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சோனியா காந்தியின் தொகுதியில் ஒரு தொகுதியை கூட கைபற்றமுடியவில்லை...என்ன காரணம்...
Wednesday, 7 March 2012
5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி சோனியா கருத்து
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி,தவறான வேட்பாளர் தேர்வே தோல்விகளுக்கு காரணம் என்று கூறிவுள்ளார்.
ஆனால் முடிவுகளை பொறுத்தவரை காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், விலைவாசி உயர்வு போன்றவைகளே காரணமாக உள்ளது,ஆனால் இதை தங்கள் தோல்விக்கு காரணமாக கருதாமல் தவறான வேட்பாளர் தேர்வே தோல்விகளுக்கு காரணம் என்று கூறிவுள்ளார்.
ஆக காங்கிரஸ் அரசாங்கம் இந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
அவர்கள் இந்த தவறுகளை மீண்டும் செய்வார்களானால் நிச்சயம் 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும்.காங்கிரஸ் கட்சியின் வருங்கலமாக கருதப்படும் ராகுல் காந்திக்கு இது நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும்.
"கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற நிலையில் தான் காங்கிரஸ் இருக்கிறது என்பதை சோனியாவே சொல்லிவிட்டார்.
Sunday, 4 March 2012
அரவான்
ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதை களங்களை கையாள ஒரு தைரியம் வேண்டும்,அந்த தைரியம் வசந்தபாலனுக்கு இருக்கிறது,அதுவும் ஒரு பீரியட் படம் எடுப்பதற்கு.அதற்காக வசந்தபலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
18 நூற்றாண்டில் தென் தமிழகமான மதுரையை சுற்றி வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார் வசந்தபாலன்.படம் முழுக்க வசந்தபாலனின் உழைப்பு தெரிகிறது.படத்தின் முதல் பாதியை பசுபதி சுமக்கிறார், இரண்டாம் பாதியை ஆதி சுமக்கிறார்.பசுபதியின் நடிப்பும் உடல் மொழியும் அசாத்தியமானது.படத்தில் மிக நுட்பமாக, களவாட செல்லும் முன் அவர்களின் கருப்பு சாமி வழிபாடு,வானத்தில் வெள்ளி பார்ப்பது,வீட்டுக்குள் சென்று சத்தமில்லாமல் திருடுவது,மாட்டிகொண்ட பின் சண்டையிடுவது,விதவிதமகா ஒலி எழுப்புவது,தப்பித்து ஓடுவது என்று மிக தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.
Friday, 2 March 2012
உரங்களுக்கான மானியம் 20 % குறைப்பு
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி,ஆனால் அந்த முதுகெலும்பை உடைக்கதுடிக்கிறது மத்திய அரசு,
உரங்களுக்கான மானியங்களை குறைப்பதன் மூலமும் மரபணு மாற்றம் செய்த விதைகளை அமெரிக்க நிறுவனம் மூலம் இறக்குமதி செய்ய துடிப்பதன் மூலமாகவும்.
ஏற்கனவே விவசாய பொருட்களின் விலை உயர்வு ,நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் குறைவு ,கூலி உயர்வு போன்ற காரணங்களால் விவசாய துறை நலிவடைந்து கொண்டு இருக்கிறது. மானியம் குறைக்கப்படுமானால் உரங்களுக்கான விலை மேலும் உயரும்.
Subscribe to:
Posts (Atom)