60% இந்திய மக்கள் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே விவசாயத்தையே நம்பியுள்ளனர்.இந்திய விவசாயமோ பருவ மழையையே நம்பியுள்ளது.பருவமழை போய்த்துபோவது, வறட்சி,வெள்ளம், விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காதது,இடைத்தரகர்களால் சுரண்டப்படுவது மற்றும்,அரசின் தவறான பொருளாதரக் கொள்கைகளால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அறிக்கையின்படி 1995-2010 ஆண்டு வரை 2,56,913 விவாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.முதல் எட்டு வருடத்தில் 1995-2002 வரை 1,21,157 இரண்டாம் எட்டு வருடத்தில் 2003-2010 வரை 1,35,756.
Year
|
Farmers’ Suicides (in numbers)
|
1997
|
13622
|
1998
|
16015
|
1999
|
16082
|
2000
|
16603
|
2001
|
16415
|
2002
|
17971
|
2003
|
17164
|
2004
|
18241
|
2005
|
17131
|
2006
|
17060
|
2007
|
16632
|
2008
|
16196
|
2009
|
17368
|
2010
|
15964
|
Total
|
232464
|
Avereage Per Year
|
16605
|
Avereage Per Day
|
45
|
Avereage Per Hour
|
2
|
Every 30 Minutes
|
1
|
Source-NCRB and K. Nagaraj (Madras Institute of
Development Studies) Report and The Hindu
|
|
Maharastra
|
50481
|
1995-2010
|
|
Total farmer suicide
|
256913
|
1995-2010
|
|
Percentage of
|
19.65%
|
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை (1995 -2010) 50,481 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
1995 -2002 ஆண்டு வரை - 20 ,066 விவசாயிகள்.
2003 -2010 ஆண்டு வரை - 30 ,415 விவசாயிகள் .
விவசாயிகள் தற்கொலையில் 20% மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் நடைபெறுகிறது.முக்கியமாக விதர்பா பகுதியில் தான் அதிகம்,2012 ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கூட ஒரு விவசாயி மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் கஜானந்த் கோதேகர்(45) பருத்தி பயிரிட்டிருந்த அவர் லோனில் டிராக்டர் ஒன்றை வாங்கி விவசாயம் செய்தார்.ஆனால் பருத்தியின் விலை குறைந்தததால் அவரால் ரூ.1 லட்சம் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை.இந்நிலையில் அவரது இளைய மகளின் திருமண ஏற்பாடுகள் வேறு செய்ய வேண்டியிருந்தது.
ஏற்கனவே கடனில் தத்தளிக்கையில் திருமண ஏற்பாடுகள் செய்ய முடியாமல் அவர் நேற்று பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விதர்பா பகுதியில் பருத்தி தான் அதிகம் பயிரிடப்படுகிறது,பருத்திக்கு சரியான விலை கிடைக்காதது மேலும் சரியான மகசூல் (yield)கிடைக்காத காரணத்தாலும் விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடைபெறுகிறது.
விளைச்சல் பொய்த்துபோவதால் கடன் கொடுக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்,அதனால் அவர்களின் குடும்பத்தினர் கடன்கொடுத்தவர்களால் கொடுமைபடுத்தப்படுகிறார்கள்,மேலும் அந்த குடும்பத்தில் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுகிறது,விதவை பெண்கள் குடும்பத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஒரு வருடத்திற்கு சராசரியாக 16,605 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்,ஒரு நாளைக்கு சராசரியாக 45 பேர்,ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 2 பேர்,ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு 1 நபர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.(அட்டவணையை பார்க்க).
ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் கோடிகள் விவசாயத்திற்கு ஒதுக்கப்படுகிறது,இருந்தாலும் ஏன் இந்த தற்கொலைகள் நடைபெறகின்றன?...ஒதுக்கப்படும் இந்த பணம் விவசாயிகளை சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியே?...இந்த அரசாங்கம் இதெற்கெல்லாம் என்ன செய்ய போகிறது?....
இந்த லட்சணத்தில் உரத்திற்கு வழங்கப்படும் மானியம் வேறு 20 % குறைக்கப்பட்டு விட்டது...இந்த அரசுக்கு விவசாயத்தை விட தொழில்துறை தான் முக்கியமாகப்படுகிறது,தொழில்துறை எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட விவசாயத்துறை முக்கியம் என்பதை எந்த அரசு எப்போது தான் உணரப்போகிறதோ?...இதே நிலை தொடருமானால் நாம் ஒரு வேளை சோற்றுக்கு கூட இன்னொரு நாட்டை நோக்கி கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்பது தான் உண்மை.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இந்த தேசத்தில் இதுபோன்ற விவசாயிகளின் தற்கொலைகள் இந்த தேசத்துக்கே அவமானம்...அதை தடுக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு உண்டு,இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ வழி செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது...அதை செய்யாமல் போனால் இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்பதற்கு மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் கஜானந்த் கோதேகர்(45). என்ற விவசாயி எழுதிய கடிதம் ஒரு உதாரணம் (மக்கள் மீது அக்கறை இல்லாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்)...
இனியாவது விழித்துகொள்ளுமா இந்த அரசு?...
அரசை விழிக்க வைக்கவேண்டும்.....
ReplyDeleteGood thought Arunai vinoth......,
ReplyDeleteBut our Government is keen in cutting the subsidies.
as per their quote if subisides are cut,,, then we all have to commit suicides.
these subsidy cut instructions come from the US and western nations which want to play with the development of india and our politicians are just doing what they say.....
-Suresh