Tuesday, 24 April 2012

தேசிய அவமானம்




60% இந்திய மக்கள் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே விவசாயத்தையே நம்பியுள்ளனர்.இந்திய விவசாயமோ பருவ மழையையே நம்பியுள்ளது.பருவமழை போய்த்துபோவது, வறட்சி,வெள்ளம், விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காதது,இடைத்தரகர்களால் சுரண்டப்படுவது மற்றும்,அரசின் தவறான பொருளாதரக் கொள்கைகளால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

Thursday, 19 April 2012

பூகம்ப பயத்தில் குழந்தையின் மனநிலை


சென்ற வாரம் வந்த பூகம்பத்தில் எனது நண்பரின் எட்டு வயது மகள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்,இரவு நேரங்களில் அந்த குழந்தை எழுந்து அம்மா பில்டிங் ஆடுகிறது,என்று கூறி தினமும் அழுகிறாள்,அவளுக்கு எப்பொழுதும் அதை பற்றியே ஒரு நினைப்பு.இதற்கு என்ன காரணம் டிவி சேனல்களில் காட்டப்பட்ட அபரிமிதமான பயமுறுத்தும் தகவல்களும்,சில சேனல்களில் இந்தோனேஷியாவில் அடித்த சுனாமி அலைகள் பற்றிய படங்களுமே, அதையெல்லாம் பார்த்த அந்த சிறிய குழந்தை பயந்து விட்டது,அவள் வீட்டிலும் எப்போது பார்த்தாலும் பூகம்பம் பற்றிய கேள்விகளையே அதிகம் கேட்டு கொண்டு இருக்கிறாள்,பயந்த முகத்துடனே எப்போதும் காணப்படுகிறாள்.மருத்துவரிடம் கூட்டிசென்றும் பலன் இல்லை.

Wednesday, 18 April 2012

கொரிய திரைப்பட விழா- Bedevilled


No.24,கல்லூரி சாலையில் உள்ள Alliance Francaise of Madras என்ற முகவரியில் கொரியன் திரைப்பட விழா நடைபெறுவதாக நண்பர் சுப்பிரமணியன் என்னிடம் தெரிவித்தார். அதனால் Bedevilled என்ற திரைப்படத்தை பார்க்க முடிந்தது.

வரும் சனிக்கிழமை வரை இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.மாலை ஆறு மணிக்கு தொடங்குகிறது.

Saturday, 14 April 2012

பார்த்ததில் பிடித்தது-முகப்புத்தகம் குறும்படம்


Friday, 13 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி (OK OK)




நான் பார்த்த ஒரு ட்ரைலர் தான் இந்த படத்தை பார்க்க தூண்டியது.சந்தானம் ஒரு பிளாஸ்டிக் க்ளாஸில் ஒரு கட்டிங் ஊற்றுவார்,அதனுடன் கொஞ்சம் தண்ணீர் கலப்பார்,குடித்து விட்டு பிளாஸ்டிக் க்ளாஸை தூக்கி குப்பை தொட்டியில் எறிவார்,இதை வைத்து ஒரு வசனம் பேசுவார்,சரக்கு தான் கதாநாயகி மீரா அதில் கலக்கும் தண்ணீர் தான் கதாநாயகன் சரவணன் சரக்கை குடித்து விட்டு,சேர்ந்த நீங்க என் மனசுக்குள்ள இருக்குறீங்க,சேர்த்து வைத்த நான் குப்பைத்தொட்டியில்(பிளாஸ்டிக் கிளாஸ்),அதுதான் வாழ்க்கை என்ற வசனம் தான் படம் பார்க்க தூண்டியது.

Thursday, 12 April 2012

வீழ்ச்சிக்கு வழி !...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினால் வேளாண் பணிகள் செய்வதற்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஆகவே, இத்திட்டத்தின் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்குத் தொடுத்த பெரியசாமி (76) என்பவரின் மனுவை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்துவிட்டது.


 இத்திட்ட நடைமுறைகளில் முறைகேடு இருக்குமானால் மனுதாரர் இது குறித்துத் தொடர்புடைய அதிகாரிகளிடம் முறையிடலாம். மாறாக, மத்திய அரசின் திட்டத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Wednesday, 11 April 2012

தற்கொலை தீர்வல்ல....




சில தினங்களுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.கடந்த வாரம் சென்னை அண்ணா பல்கலைகழக மாணவர் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.கடந்த வருடத்தில் மட்டும் ஐ.ஐ.டி மாணவர்கள் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்னவாக இருக்கும்?...எவ்வவளோ கஷ்டப்பட்டு படித்து இவ்வளவு பெரிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் ஏன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.அவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு என்ன கஷ்டம் இருந்து இருக்கும்.

Monday, 9 April 2012

வலிகளை வெல்லும் காலம்…


வாழ்க்கையில் இன்பம்,துன்பம் மாறி மாறி வரும்.அதுதான் ஒரு சுவாரசியமான வாழ்க்கையாக இருக்கும்.சிலருக்கு வாழ்வில் சில துன்பமான நிகழ்ச்சிகள் நடந்து அவர்களின் வாழ்க்கையே மாற்றி விடும்,மேலும் ஆறாத காயங்களை மனதில் ஏற்படுத்திவிடும்.அதற்கு மருந்து இல்லை.காயங்களுக்கு மருந்து கால மாற்றம் மட்டுமே.


காலம் எல்லா வகையான காயங்களுக்கும் மருந்து போடும்.அதற்கு ஆகும் நேரம் மட்டுமே முன்,பின் இருக்கும்.அதற்குள் நமக்கான வாய்ப்புகள் ஓடிவிடும்.

Wednesday, 4 April 2012

மறித்து போகிறதா மனிதாபிமானம்?..


சில நாட்களுக்கு முன் 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி சென்னை கடற்கரையில் தற்கொலைக்கு முயன்றார்,பின் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஒரு முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

80 வயது பாட்டிக்கு தற்கொலை செய்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? அப்படிப்பட்ட மனநிலைக்கு அவர் செல்ல காரணம் என்ன...