Wednesday, 14 May 2014

தமிழருவி மணியன் மன்மோகன் சிங்க்கு கடிதம்


மாண்புமிகு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு... உங்கள் பத்தாண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்ட பலகோடி சாமான்ய இந்தியக் குடிமக்களில் ஒருவன் மிகுந்த பணிவோடும் நிறைந்த நல்லன்போடும் எழுதும் கடிதம். உங்கள் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர். இந்தக் கடிதத்தின் சாரத்தை அவர் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன்!

Monday, 14 April 2014

(ரத்த) சிவப்பு வறுமையின் நிறம் மட்டுமல்ல



(ரத்த) சிவப்பு வறுமையின் நிறம் மட்டுமல்ல

 

 

ஒவ்வொரு தேர்தலிலும் கருப்பு பணத்தை மீட்டு வருவோம்என்பார்கள் காங்கிரஸ் .

ஆனால் அது கருப்பு பணமல்ல நம்முடைய ரத்தத்தை உறிஞ்சிய பல உயிர்கொல்லி அட்டைகள் வைத்துள்ள சிவப்பு பணம் என்பது  தினமலரின் இந்த கட்டுரையை படித்தால் புரியும்

Tuesday, 1 April 2014

முட்டாள் தின நல் வாழ்த்துக்கள்


முட்டாள் தின நல் வாழ்த்துக்கள்


இன்றைய அடேடே மதி கார்ட்டூன்

 

Wednesday, 9 January 2013

சரக்கடிக்க இனாம் தரும் தினமலர்


தினமலரில் வரும் இது உங்கள் இடம் பகுதியில் ஒருவர் தான் சரக்கடிக்கும் பழக்கம் அதன் அனுபவம் பற்றி எழுதியதற்கு, அவர் மேலும் மேலும் சரக்கடித்து மட்டையாக 500 ரூபாய் , பரிசாக கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளது.

Friday, 21 December 2012

DABANGG 3 இது சினிமா விமர்சனம் அல்ல

DABANGG 3   
  இது சினிமா விமர்சனம் அல்ல


நரேந்திர மோடி குஜராத்தில் மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆகிறார் - இது செய்தி



இதே செய்தியை  எப்படி சொல்லுகிறார்கள், எப்படி பார்க்கிறார்கள் என்று பாருங்கள்


  கருணாநிதி :  காங்கிரஸ் வளர்கிறது, பாஜக   தளர்கிறது


 இட்லி வடை  : மோடி பிரதமராக வாழ்த்துக்கள்




THE HINDU: Hat-trick for Narendra Modi, sticky wicket for BJP 

  

TIMES OF INDIA:
Hat-trick to reverse west’s pariah status for Narendra Modi?

இதை சத்தியமா நான் சொல்லவில்லை.  டைம்ஸ் ஆப் இந்தியாவில்  வந்த செய்தி
அதன் லின்க்கை இங்கே கொடுத்துள்ளேன் .


இதில் உள்ள ஒரு வார்த்தைக்காக என்னை பல
 செக் ஷன்களில்   பலப்பல சட்ட விதிப்படி  கைது செய்யாலாம்
ஜாமீன் கொடுக்ககூட ஒருவரும் இல்லை.




நரேந்திர மோடி ஹிந்தியில் பேசியதால் இப்போதே அவர் டெல்லிக்கு போக தடம் போடுகிறார்  என்று எல்லா செய்திகளும் யூகம் செய்கிறார்கள்

நிதிஷ் குமார்  நரேந்திர  மோடி பற்றி வாயை திறக்கவில்லை - மௌன விரதம் போலும்


காங்கிரஸ்    வடிவேலு பாணியில்  :     இதுஒன்னும் பெரிய வெற்றி இல்லை . நாங்கள் போன தேர்தலை விட அதிக வாக்குகள் வாங்கி இருக்கிறோம்





ஒரு வேண்டுகோள்:


பதிவர்களுக்காக ஒரு பொதுவான 
66-A பதிவர் நல நிதி
66-A  நிவாரண நிதி
66-A  பதிவர் பின்னூட்ட நிதி
66-A   LIKE   நிதி  ஏற்படுதலாம்.


என்னை போன்ற கத்துக்குட்டி பதிவர்கள் சிறையிலிருந்து பதிவு எழுதினால் நல்லாவா இருக்கும் ???

Wednesday, 5 December 2012

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு


உதாரணம்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்பான விற்பனை நிறுவனங்களான பெப்சி மற்றும் கோகோ-கோலா போன்றவற்றை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் போது இந்த நிறுவனங்களால் இந்திய சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது என்று சொல்லப்பட்டது,ஆனால் இன்றைய நிலைமையே வேறு எந்த ஒரு சிறு கிராமத்திலும் கோலி சோடா,கலர் சோடா கிடைப்பதே இல்லை,ஒரு கிராமத்திற்கு ஒரு கோலி சோடா வியாபாரியின் வாழ்க்கை இந்த அந்நிய முதலீட்டால் பாழாய் போனது தான் மிச்சம்.

Thursday, 29 November 2012

யார் நல்ல வியாபாரி?...


யார் நல்ல வியாபாரி?

தன்னிடம் உள்ள பொருளை விற்பவனும்,தன்னுடைய அறிவை விற்பவனும்,தன்னுடைய கண்டுபிடிப்புகளை விற்பவனும் மட்டுமே நல்ல வியாபாரிகள்.ஆனால் அதையும் தாண்டி தன்னுடைய மக்கள் செல்வாக்கை விற்பவர்களை என்னவென்று சொல்ல முடியும்.

அப்படித்தான் திமுக இன்று நடந்து கொண்டு இருக்கிறது,முதலில் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை திமுக எதிர்க்கும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது,இரண்டு கட்ட பேச்சு வார்த்தைக்கு (பேரத்திற்கு) பிறகு திமுக சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை மனக் கசப்போடு ஆதரிக்கும் என்று கலைஞர் அறிவித்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? திமுக எதிர்த்தால் காங்கிரஸ் ஆட்சி கலைந்து விடும் மதவாத கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிறார்.இவ்வாறு சொன்ன இதே கலைஞர் சென்ற பாஜக ஆட்சியில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பங்கு வகித்தார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.

அவருக்கு தேவை நடுவண் அரசில் பதவி,எந்த அரசாக இருந்தாலும் பரவாயில்லை,தேவகௌடா அரசிலும்,ஐ.கே.குஜரால் அரசிலும், பாஜக அரசிலும் அவரது மருமகன் முரசொலிமாறன் மத்திய அமைச்சராக இருந்தார்,அதற்கு பிறகு இப்போது நடந்து கொண்டு இருக்கிற எட்டரை ஆண்டுகால காங்கிரஸ் அரசில் அவரது பேரன்,அவரது மகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று எப்போதும் அதிகாரத்தில் இருக்க ஆசைப்படுபவர்.

இப்போது தன் மகளுக்காகவும்,ராஜாவுக்காகவும், கலைஞர் தொலைக்காட்சி வழக்கில் இருந்து விடுபடவும் அவர் காங்கிரஸ் கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டிய நிலையில் உள்ளார்.ஆக அவருக்கு அவருடைய சுயலாபம் தான் முக்கியம்.மக்களாவது மன்னாங்கட்டியாவது.

ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் பங்கு வகித்தபோது பாஜக மதவாத கட்சி என்று கலைஞர் அவர்களுக்கு தெரியாதா?அவர் எலிப்போறிக்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறார் உள்ளே இருந்தாலும்,வெளியில் போனாலும் இழப்பு அவருக்குத் தான் என்பதை அவர் மறந்து விட்டார்.ஏற்கனவே ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது எல்லாம் முடிந்த பிறகு டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐ.நா சபை மனித உரிமை அமைப்பில் கொடுத்து விட்டு தமிழருக்கு இவர்தான் நல்லது செய்கிறவர் போல் நாடகமாடுகிறார்.ஏன் இவருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மூலமாக ஐ.நா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பேசி இருக்கலாமே?அதையெல்லாம் செய்வாரா இவர்.இவருக்கு தேவை அதிகாரம்,அமைச்சர் பதவி மட்டுமே.

ஈழத் தமிழர்களும்,சில்லறை வியாபாரிகளும் வாழ்ந்தால் என்ன,செத்தால் என்ன அதை பற்றி எல்லாம் கவலை இல்லை.

அறிஞர் அண்ணா பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போன்றது என்றார் ஆனால் அவர் வழி வந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களோ பதவியை இடுப்பில் கட்டும் வேட்டியாக மாற்றிக்கொண்டார் என்பது தான் வேதனை. துண்டு இல்லாமல் இருக்கலாம் ஆனால் வேட்டி இல்லாமல் இருக்க முடியுமா?

காங்கிரசின் எல்லா அக்கிரம,அநியாயங்களுக்கும் துணை போகிறார்,அதற்கான பலனை நிச்சயம் இவர் அனுபவிப்பர்.எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் கலைஞர் அவர்களே.

இப்போது சொல்லுங்கள் யார் நல்ல வியாபாரி என்று?...


அருணை வினோத்.