Thursday, 29 November 2012

யார் நல்ல வியாபாரி?...


யார் நல்ல வியாபாரி?

தன்னிடம் உள்ள பொருளை விற்பவனும்,தன்னுடைய அறிவை விற்பவனும்,தன்னுடைய கண்டுபிடிப்புகளை விற்பவனும் மட்டுமே நல்ல வியாபாரிகள்.ஆனால் அதையும் தாண்டி தன்னுடைய மக்கள் செல்வாக்கை விற்பவர்களை என்னவென்று சொல்ல முடியும்.

அப்படித்தான் திமுக இன்று நடந்து கொண்டு இருக்கிறது,முதலில் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை திமுக எதிர்க்கும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது,இரண்டு கட்ட பேச்சு வார்த்தைக்கு (பேரத்திற்கு) பிறகு திமுக சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை மனக் கசப்போடு ஆதரிக்கும் என்று கலைஞர் அறிவித்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? திமுக எதிர்த்தால் காங்கிரஸ் ஆட்சி கலைந்து விடும் மதவாத கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிறார்.இவ்வாறு சொன்ன இதே கலைஞர் சென்ற பாஜக ஆட்சியில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பங்கு வகித்தார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.

அவருக்கு தேவை நடுவண் அரசில் பதவி,எந்த அரசாக இருந்தாலும் பரவாயில்லை,தேவகௌடா அரசிலும்,ஐ.கே.குஜரால் அரசிலும், பாஜக அரசிலும் அவரது மருமகன் முரசொலிமாறன் மத்திய அமைச்சராக இருந்தார்,அதற்கு பிறகு இப்போது நடந்து கொண்டு இருக்கிற எட்டரை ஆண்டுகால காங்கிரஸ் அரசில் அவரது பேரன்,அவரது மகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று எப்போதும் அதிகாரத்தில் இருக்க ஆசைப்படுபவர்.

இப்போது தன் மகளுக்காகவும்,ராஜாவுக்காகவும், கலைஞர் தொலைக்காட்சி வழக்கில் இருந்து விடுபடவும் அவர் காங்கிரஸ் கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டிய நிலையில் உள்ளார்.ஆக அவருக்கு அவருடைய சுயலாபம் தான் முக்கியம்.மக்களாவது மன்னாங்கட்டியாவது.

ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் பங்கு வகித்தபோது பாஜக மதவாத கட்சி என்று கலைஞர் அவர்களுக்கு தெரியாதா?அவர் எலிப்போறிக்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறார் உள்ளே இருந்தாலும்,வெளியில் போனாலும் இழப்பு அவருக்குத் தான் என்பதை அவர் மறந்து விட்டார்.ஏற்கனவே ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது எல்லாம் முடிந்த பிறகு டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐ.நா சபை மனித உரிமை அமைப்பில் கொடுத்து விட்டு தமிழருக்கு இவர்தான் நல்லது செய்கிறவர் போல் நாடகமாடுகிறார்.ஏன் இவருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மூலமாக ஐ.நா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பேசி இருக்கலாமே?அதையெல்லாம் செய்வாரா இவர்.இவருக்கு தேவை அதிகாரம்,அமைச்சர் பதவி மட்டுமே.

ஈழத் தமிழர்களும்,சில்லறை வியாபாரிகளும் வாழ்ந்தால் என்ன,செத்தால் என்ன அதை பற்றி எல்லாம் கவலை இல்லை.

அறிஞர் அண்ணா பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போன்றது என்றார் ஆனால் அவர் வழி வந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களோ பதவியை இடுப்பில் கட்டும் வேட்டியாக மாற்றிக்கொண்டார் என்பது தான் வேதனை. துண்டு இல்லாமல் இருக்கலாம் ஆனால் வேட்டி இல்லாமல் இருக்க முடியுமா?

காங்கிரசின் எல்லா அக்கிரம,அநியாயங்களுக்கும் துணை போகிறார்,அதற்கான பலனை நிச்சயம் இவர் அனுபவிப்பர்.எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் கலைஞர் அவர்களே.

இப்போது சொல்லுங்கள் யார் நல்ல வியாபாரி என்று?...


அருணை வினோத்.

Tuesday, 27 November 2012

மாவீரர் தினம்-நவம்பர் 27




மண்ணின் மானம் காக்கவும்,தம் இன மக்கள் சுதந்திரமாக வாழவும்  தம் இன்னுயிர்களை கொடையாக தந்த தேசிய தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூறி வீர வணக்கம் செலுத்துவோம்.

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

அருணை வினோத்

Saturday, 24 November 2012

காங்கிரஸ் கட்சியின் கேவலமான அரசியல்


அடுத்தவன் இரத்தத்தின் மீதே அரசியல் செய்து பழக்கப்பட்டு போன காங்கிரஸ் இப்போது குஜராத் தேர்தலுக்காக அஜ்மல் கசாப்பை அவசர அவசரமாக தூக்கில் போட்டு தனது உடைந்து போன பெயரை நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளது.

குஜராத்தில் தேர்தலில் கிடைக்க போகும் ஒன்று,இரண்டு MLA சீட்டுக்காக இப்படிப்பட்ட கேவலமான காரியத்தை செய்து இருக்கிறது.ஏனென்றால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமாக பிரச்சனையாக பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு மற்றும் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை இந்த அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று குற்றம் சாட்டி தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்,அதுவே பாஜக வின் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக இருந்தது,இப்போது பாஜக வால் அதை செய்ய இயலாது.இப்போது உடனடியாக அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சக பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார்,உள்துறை அமைச்சர் 48 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்,இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை.ஏனென்றால் குஜராத் தேர்தல் மற்றும் அடுத்தவருட பாராளுமன்ற தேர்தல்.

Sunday, 11 November 2012

தற்கொலை தீர்வல்ல – பாகம் 2


கடந்த வாரம் என் நண்பனின் நண்பன் காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்,நல்லவேளை ஒரு வழியாக அவர் காப்பாற்றப்பட்டார்.

இத்தனைக்கும் அவர் ஒரே மகன் அவருடைய பெற்றோருக்கு,ஒருவேளை அவர் காப்பாற்றபடாமல் போயிருந்தால் அவருடைய பெற்றோர்கள் அவரை இழந்து தவித்து போயிருப்பார்கள்.

இத்தனை ஆண்டுகாலம்அவரை பெற்று படிக்க வைத்த பெற்றோரை விட்டு விட்டு,காதலுக்காக தன் உயிரை துறக்க முடிவெடுத்தது தான் காலத்தின் கொடுமை.அவருக்கு பிறகு அந்த காதல் அவரது பெற்றோர்களை காப்பாற்றுமா?