Wednesday, 29 February 2012

சோனியாகாந்தி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்




சோனியா மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருக்கிறார்.அது என்னமோ தெரியலைங்க எல்லா அரசியல்வாதிகளும்,சினிமா நடிகர்களும்,தொழில் அதிபர்களும்,கிரிக்கெட் வீரர்களும் மருத்துவம் பார்க்க  வெளிநாடு சென்றுவிடுகிறார்கள்.


அப்ப இந்தியாவில் உயர்தர மருத்துவ மனைகளும்,மருத்துவர்களும் இல்லையா?....

இருள் எப்போது விலகும் ?...


கடந்த சில வருடங்களாக மின்சாரம் எப்போது வரும்,எப்போது போகும் என்றே தெரியாது,அந்த அந்த அளவுக்கு நிலைமை மோசம். சென்னை மாநகரத்தில் 2  மணி நேர மின் தடை,வெளியூர்களில் 4 மணிநேர மின்தடை என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டாலும்,அறிவிக்கபடாத மின்வெட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கிறது.இதனால் தொழில் துறை நலிவடைந்து உள்ளது.

Sunday, 26 February 2012

பார்த்ததில் பிடித்தது-சர்தார்ஜி - குறும்படம்


மின்தடைக்கு நன்றி சொல்லி ஒரு போஸ்டர்


Friday, 24 February 2012

என்கவுண்டர் - போலீஸ் கதை(கொலை)

இரு வங்கி கொள்ளைக்காக, (33 லட்சம் ரூபாய்க்காக), எந்த ஒரு விசாரணையும் செய்யாமல், சந்தேகத்தின் பேரில் 5 நபர்களை போலீஸ் சுட்டு கொன்று இருக்கிறது. போலீஸ் சந்தேகப்படும் ஒரு நபரின் புகைப்படம் மட்டும் வெளியிடப்பட்டு 10 மணி நேரத்திற்குள், அவர்கள் கொல்லப்பட்டு இருகிறார்கள்.  நம் அரசியல் அமைப்பு சட்டம் எப்போதும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுத்தும். ஏனென்றல் "ஒரு நிரபராதி கூட தண்டிக்க பட கூடாது" என்பதற்காக.